Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2015

Yearly Archives: 2015

ஆர்ப்பாட்டம் நீர் ஆதாரம் பரப்புரை போராட்டங்கள்

போரூர் ஏரி குறித்தான பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு

போரூர் ஏரி குறித்தான பசுமை தீர்ப்பாயத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: சென்னை போரூர் ஏரியின் ஒரு பகுதியை தனியாருக்கு (இராமசந்திரா மருத்துவமனைக்கு) தாரைவாக்க தமிழக பொதுப்பணித்துறையால் ஏரியின் குறுக்கே போடப்பட்டிருந்த ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் பயாஃப்ரா விடுதலைப் போராட்டம.

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் பயாஃப்ரா விடுதலைப் போராட்டம். இக்போ மக்களுடைய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை 1970இல் அமெரிக்கா-பிரிட்டன் -சோவியத்-எகிப்து உள்ளிட்ட நாடுகள் தங்களது பிராந்திய நலனுக்காக இந்த விடுதலைப் ...
நினைவேந்தல் பரப்புரை

மாவீரர் நாள் நிகழ்வு

திருப்பூரில் 27-நவம்பர்-2015  அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருகிணைத்து நடத்திய மாவீரர் நாள் நிகழ்வு. பறை முழக்கம் நிகழ்த்தியும், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் நிகழ்வு துவங்கியது. தந்தை பெரியார் ...
பரப்புரை

வெகுமக்கள் எழுச்சிக்கான விதையை தமிழீழத்தில் செந்தூரன் விதைத்திருக்கிறார்

வெகுமக்கள் எழுச்சிக்கான விதையை தமிழீழத்தில் செந்தூரன் விதைத்திருக்கிறார். போலி வாக்கு வங்கி அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறது செந்தூரனின் தியாகம். மாவீரனாக இன்று நம்முன் மக்கள் எழுச்சிக்கான அறைக்கூவலை விடுத்திருக்கிறார். நல்லிணக்கம், ...
கருத்தரங்கம் பரப்புரை

தமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள் – மதுரை கருத்தரங்கம்

நவம்பர் 15 – 2015, ஞாயிறு காலை 11 மணி முதல் 3 மணி வரை மதுரை காலேஜ் ஹவுஸ் , திருவள்ளுவர் அரங்கில் “தமிழீழ விடுதலையைத் தடுக்கும் ஐ.நா ...
ஆவணங்கள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்களின் மறைவு

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழீழ விடுதலை குறித்தான போராட்டத்திலும், மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்தவர். 95 வயதிலும் ...
ஆவணங்கள்

தமிழறிஞர் அய்யா.அரணமுறுவல் மறைவு

தமிழறிஞர் அய்யா.அரணமுறுவல் அவர்கள் இன்று காலை திருநெல்வேலியில் மறைந்தார். அனைத்து தமிழ் மொழி உரிமைப் போராட்டங்கள், தமிழினப் பாதுகாப்பு போராட்டங்கள், வாழ்வுரிமைச்சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர், முன்னனியில் நின்ற மூத்த அறிஞர். ...
பரப்புரை

வி.கே.சிங்கை வன்மையாக கண்டிக்கிறோம்

சாதி வெறியர்களால் ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை, நாய்கள் மீது கல்லெறிவதுடன் ஒப்பிட்டு பார்ப்பனிய திமிருடன் பேசிய பாஜக-வின் மத்திய அமைச்சரும், தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியுமான வி.கே ...
அணுசக்தி தனியார்மயம் பரப்புரை

ஒரு மீனின் கதை – சூழலியல் நாடகம்

ஒரு சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக திகழ்வது கலையும் இலக்கியமும் ஆகும். இந்த கலைகளில் ஒன்றான ’மைம்’ நாடக கலை என்பது வசனங்கள் இல்லாமல் மௌனத்தின் துணை கொண்டு தனது ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

அமெரிக்க தூதரகம் முற்றுகை

2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்ட பொழுதில் மே17 இயக்கம் இது சமரசத்திற்கு வழி செய்யும் சதியை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது என்று பதிவு செய்தது. மே மாதம் மூன்றாம் ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

அமெரிக்காவின் நரித்தனமும் அழிக்கப்படும் தமிழர் கோரிக்கையும்

கடந்த ஆகஸ்ட் 25’2015 அன்று திரிகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் பேசிய இலங்கையின் அதிபர் சிறிசேன. சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். உடனே இதற்குதான் காத்திருந்ததை ...
ஈழ விடுதலை போராட்டங்கள் முற்றுகை

அமெரிக்க தூதரகம் முற்றுகை – பதாகைகள்

தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, இன்று தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அயோக்கிய் அமெரிக்காவுக்கு பாடம் புகட்டத் தயாராவோம். அமெரிக்க சந்தைக்கு எதிராக களம் காண்போம். அமெரிக்கப் பொருட்களான KFC, ...
ஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் முற்றுகை

தமிழர் (இந்திய) கடலும் ஈழத்தமிழர் சிக்கலும்

நேற்றைய ஹுந்து ஆங்கில பதிப்பில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்குவது குறித்தான பேச்சுவார்த்தை செப்.1 முதல் 3 வரை ...
தனியார்மயம் பரப்புரை

செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம்

நாட்டை விற்கும் பாஜக அரசினைக் கண்டிப்போம். செப்டம்பர் 2 இல் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம். ...
கருத்தரங்கம் மே 17

ஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேச சதிகளும் நமது கடமைகளும் – கருத்தரங்கம்

நேற்று 22-8-2015 ’ஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேச சதிகளும் நமது கடமைகளும்’ என்ற தலைபில் சென்னை செ.தெ நாயகம் பள்ளியில் மே 17 இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ...
கருத்தரங்கம்

ஈழமும் தமிழகமும் – ஆய்வரங்கம்

ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த ஒரு வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், சர்வதேசமும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலை போராட்டத்தை குறித்த நமது செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் சமர்பிக்கப் படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும் அனைத்து தோழர்களும் பங்கேற்க வேண்டுகிறோம் மே 17 இயக்கம். ...
ஆர்ப்பாட்டம் தனியார்மயம்

தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தி மறியல் போராட்டம்.

அரசுபள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக சென்னையில் மூன்றாம் நாளாக நடைபெற்ற தலைமைச் செயலக மறியல் போராட்டம் பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் ஆகத்து 17 முதல் ஆகத்து 19 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, சென்னைத் தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாம் நாளான இன்று மே 17 இயக்கம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை உள்ளிட்ட அமைப்புகள் மறியலில் கலந்து கொண்டனர். தமிழ்வழிக்கல்வியை வழியுறுத்தி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறை கைது செய்து சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். ...
பரப்புரை

இலங்கை தேர்தல் குறித்த விவாதம்

இலங்கை தேர்தல் குறித்து நேற்று 17.08.15 சன்நீயுஸ் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ்காரர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்று சொன்னதற்கும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாதான் உதவியது இந்திய அதிகாரிகளை விசாரிக்கவேண்டுமென்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பேச்சு. ...
சாதி பரப்புரை பொதுக் கட்டுரைகள்

சேசசமுத்திரம் சாதிவெறி தாக்குதல் – மே17 இயக்கம் கண்டனம்

விழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம்(அகரம்) கிராமத்தில் நிகழ்ந்த சாதிவெறி தாக்குதலை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இப்பகுதியில் தாம் உருவாக்கிய தேரை ஓட்ட கடந்த 4 வருடங்களாக தாழ்த்தபட்ட மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித்து அப்பகுதியில் இருக்கும் முற்போக்கு இயக்கத் தோழர்களும், தலித் இயக்க-கட்சித் தோழர்களும் போராடி வந்திருக்கிறார்கள். இன்று (16-08-2015) தேரோட்டுவதற்கான அனுமதியை பெற்றபின்னர் , அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும், அதற்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்டு 15 ல் சுமார் 7-15 மணியளவில் தேர் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் கூரை வீட்டிற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் தீ வைத்து நாசம் செய்தனர் அதோடு மட்டுமின்றி பெட்ரோல் குண்டு வீசினர் அப்போது தடுக்க சென்ற காவல்துறையினரையிம் கல் வீசியும் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்கினர் அதில் ஏழு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் 3 காவல்துறை அதிகாரிக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதால் மேலும் 3 வீடுகள் தீக்கிரையாக்கினர், தேர் மீதும் பெட்ரோல் குண்டு வீசி சேதம் செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்கி அழிப்பதும், அவர்களது வீடுகளில் இருந்து வெளியேறும் வண்ணம் தாக்குதலை அவர்களது குடியிருப்புகளில் நிகழ்த்துவதும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. வலிமையான பின்னனி இல்லாமல் இது போன்ற தாக்குதலை செய்யும் மனநிலை இச்சாதிவெறியாளர்களுக்கு உருவாக முடியாது. கோழையான மனநிலையை கொண்ட இந்தசாதி வெறியாளர்களிடத்தில் அரசு மென்மையான போக்கையே கடைபிடிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட வன்முறைகொண்டு தடுத்து வெறியாட்டம் போடும் சாதிவெறியை தமிழக அரசு இதுவரை கடுமையாக ஒடுக்கத் தவறியிருப்பதை சாதகமாக பயன்படுத்தியே இது போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடக்கின்றன. மனிதத் தன்மையற்ற சாதிவெறியை திட்டமிட்டு பரப்புவதும், வன்முறை தாக்குதல்களை வடிவமைத்து பாதுகாப்பற்று வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்துவதும் வளர்ந்து வருகிறது. கோகுல்ராசு கொலையாளி யார் என்று தெரிந்தும், இதுவரை அதிமுக அரசு கைதுசெய்யவில்லை. அரசுக்கு தெரியாமல் இந்த வன்முறையும் நிகழ வாய்ப்பில்லை என்றே தோழர்கள் பதிவு செய்தார்கள். இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கிறது. பெருமளவில் கற்களை கொண்டும் தாக்கி இருக்கின்றனர். இரு தரப்பிற்கும் இடையே அமைதிக் குழு ஏற்படுத்தி காவல்துறையினர் பேசிய பொழுது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மறுத்து சென்ற சாதிவெறியினர் மீது தக்க நடவெடிக்கைகளை எடுத்திருந்தால் வன்முறை தடுக்கப்பட்டிருக்கலாம். அரசிற்கு தெரியாமல் எப்படி பெட்ரோல் குண்டுகளை பெருமளவில் தயாரித்து தாக்குதலுக்கு தயாரவது இயன்றது என்பது கேள்விக்குரியே?.. இந்தப் பகுதி அதிமுக எம்.எல்.ஏ மோகன் அவர்களுடைய பகுதி. இவர் அமைச்சராக இருக்கிறார். கிராமப்புற தொழில் மற்றும் சிறு தொழில்களுக்கான அமைச்சராக இருக்கிறார். இதுவரை இவர் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவரவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக ஊரை விட்டி வெளியேறி இருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் இவர்கள் இருப்பதால் இவர்களது பாதுகாப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.. சாதிவெறியை வளர்த்து பாதுகாக்கும் கும்பல்களை அரசு கடுமையாக கையாள மறுக்கிறது. அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக நிற்க மறுப்பதை கண்டிப்பது அவசியம். மனித குல விரோத தாக்குதலுக்குள்ளான உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றாவோம். கோகுல்ராசு, நெல்லை-மகராசன், ஒட்டன்சத்திரம்-முத்துக்குமார் போன்றோரின் கொலைக்கான நீதிக்கு அனைவரும் ஒன்றாக திரண்டிருந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க தவறும் ஒவ்வொரு கணமும் இது போன்ற மனித குல விரோதிகள் வலிமையாவதை நம்மால் தடுக்க இயலாது.... நாம் ஒன்றாக திரண்டு சாதிவெறியன்களுக்கு எதிரான குரலை வலுப்படுத்துவோம். அகரம் கிராம மக்களுக்கான நீதியின் குரலை நாம் உரக்க வெளிப்படுத்துவோம். இந்த காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதிமுக அமைச்சர் திரு.மோகன் அவர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் எனும் கோரிக்கையை இச்சமயத்தில் முன்வைக்க விரும்புகிறோம். ஏழை எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை காக்க வக்கற்ற அரசும், அரசதிகாரமும் மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பதாகவே நம்ப இயலும். இந்த வகையிலேயே கடந்த வருடங்கள் முதல் இது நாள் வரை தமிழக அரசும், அதிகார வர்க்கமும் செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்நிகழ்விற்கு அதிமுக அரசு உடனடியாக கடுமையான நடவெடிக்கை எடுத்து சமூகவிரோத-சாதி வெறியர்களை கைது செய்வதும், அப்பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்க தவறியதால் பதவி விலகுவதும் உடனடி எதிர்வினையாக கருதுகிறோம். சாதிவெறியர்களுக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றிணையுமாறு மே17 இயக்கம் கோரிக்கை வைக்கிறது. மே பதினேழு இயக்கம். 16-08-2015 ...
ஈழ விடுதலை காணொளிகள் முக்கிய காணொளிகள்

ஈழத்தமிழரும், இலங்கை தேர்தலும் – மே பதினேழு இயக்கம்

ஈழத்தமிழரும், இலங்கை தேர்தலும். - மே பதினேழு இயக்கம் இலங்கை ராணுவத்தினரை சர்வதேசம் விசாரிப்பதை நாங்கள் ஒருபொழுதும் அனுமதியோம் என்று ரணில் தெளிவாக சொல்லிய பிறகு, உள்நாட்டு விசாரணை முறையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று ஐ.நா அதிகாரி எனும் போர்வையில் அமெரிக்கா மிரட்டிய பின்னர், தனது பதவிகளை மேற்குலகம் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை ஐ.நாவின் தலைமைச் செயலகம் அனுமதித்த பின்னர், இலங்கையோடு ராணுவ-வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்திக்கொண்ட பின்னர், ஈழத்தமிழ் குடிமக்கள் எவ்விதம் இந்த தேர்தலை எதிர்கொள்ள இயலும் என்பதை தீவிரவிவாதத்திற்கு உட்படுத்தும் காலகட்டம் இது. மே 17 இயக்கம் இந்த தேர்தலை எவ்விதம் அணுகுகிறது என்பதை குறைந்த பட்ச அளவில் முன்வைக்கிறோம். நேர்மையான அரசியல் தலைமைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறோம். இந்தியாவாலும் , மேற்குலகத்தாலும் ஆளப்படுகிற தமிழர்களின் பிரதான கூட்டமைப்பினை கடந்து புதிய குரல்களை அடையாளம் காண்பதும், சமரசமற்ற முழக்கங்களை முன்னெடுப்பதும், தேர்தல் கடந்த வலிமையான மக்கள் இயக்கங்களை உருவாக்கும் வலிமை கொண்ட ஈழத்தமிழ் இளைஞர்களையும், மாணவர்களையும் களத்திற்கு அழைக்கிறோம். இலங்கையின் அரசியல் சாசனத்தை புறக்கணித்துவிட்டு, மக்கள் திரள் அரசியலை மேற்கொண்டு அரசுகளை வெல்வோம். உங்களுடன் எப்பொழுதும் தமிழகத்தின் முற்போக்கு தோழர்கள் கரம் கோப்பார்கள். பெரும் மக்கள் திரள் போராட்டங்களைக் கொண்டு வென்றெடுப்போம் தமிழீழ விடுதலையை. மே17 இயக்கம். ...
ஈழ விடுதலை காணொளிகள் முக்கிய காணொளிகள்

சானல் 4 அம்பலப்படுத்திய ஐநாவின் ஆவணம் குறித்த காணொளி

சானல் 4 அம்பலப்படுத்திய ஐநாவின் ஆவணம் குறித்த காணொளி. அதன் தமிழாக்கம் : "இந்த ஆவணம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிர்ச்சியளிக்ககூடியதாகவும் இருக்கின்றது. அறுபது ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் மீதும் போர்குற்றங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டது இலங்கை அரசின் ஷெல் தாக்குதலால் தான். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையம் போர் குற்றங்கள் மீது சுதந்திர சர்வதேச விசாரணை தொடங்க இருப்பதாக முடிவெடுத்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கின்றது. அந்த அறிக்கையில் என்ன இருக்கும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. அதில் பாதிக்க பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதியும் முன்னேற்றம் பெற ஏதும் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் சர்வதேச விசாரணையை சார்ந்தே இருக்கின்றது. அவர்கள் இலங்கை அரசே விசாரணையை நடத்தும் என்றால் அது போலி நீதிமன்றமாகவே இருக்கும். அது நீதியை பெற்று தரும் என்று துளியும் நம்பிக்கை இருக்காது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் வர இருக்கும் நிலையில் கிடைத்துள்ள இந்த ஆவணம் அதிர்ச்சியாக உள்ளது. ஐநாவால் இலங்கை அரசின் ஒப்புதலோடு தயாரிக்கப்பட்ட இந்த உள்ளக ஆவணம் கோருவது ஐநாவின் தொழிற்நுட்ப உதவியோடு நடக்கும் முழுமையான உள்நாட்டு விசாரணை. எந்த விசாரணை முறையை பாதிக்கப்பட்டோரும், தமிழ் அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் தெளிவாக புறக்கனித்தார்களோ அதே மாதிரியான விசாரணை ஒன்றையே இந்த ஆவணம் கோருகின்றது. இந்த ஆவணத்தில் கவனிக்க தக்க மற்றொரு செய்தி என்ன வென்றால், நடைமுறைபடுத்தும் கூட்டாளிகள் ( Implementing partners) என்ற ஒரு பதம் வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டவர்களில் முதன்மையாக இலங்கை அரசையும் , இரண்டாவதா வட மாகாண சபையையும் சொல்லுகின்றது. இதில் வட மாகாண சபை தான் தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள். இந்த ஆவணத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வட மாகாண முதல்வரிடம் இதை பற்றி நங்கள் கேட்ட போது, இந்த ஆவணத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அதற்காக ஏதும் செய்ய விரும்பவில்லை, இந்த ஆவணம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என்றும் தெரிவித்தார். அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணத்தை பார்க்கும்போது இதில் ஐநாவும் அல்லது ஐநாவில் இது தொடர்பில் இயங்குவோரும் இலங்கை அரசோடு சேர்ந்து திரைமறைவில் உள்நாட்டு விசாரணையை கொண்டுவருகிறார்கள் என்ற சொல்லப்பட்டு வந்த குற்றசாட்டு மேலும் உறுதியாகிறது. ஆயினும் நமக்கு தெரியும் பாதிக்கப்பட்டவர்களும் பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும் இதனை 'ஒரு போலி நீதிமன்றத்தை தவிர வேறொன்றும் இல்லை - நீதியை எதிர்பார்த்தவருக்கு நம்பிக்கை துரோகத்தை தவிர வேறொண்டும் இல்லை' - என்றே கருதுவார்கள்." ...
ஈழ விடுதலை கருத்தரங்கம்

“தமிழ்த் தேசியம் – காலத்தின் கட்டாயம்” – கருத்தரங்கம் – வேலூர்

தமிழ்த் தேச நடுவம் முன்னெடுக்கும் "தமிழ்த் தேசியம் - காலத்தின் கட்டாயம்" - கருத்தரங்கம் - நாளை (9-8-15) - மாலை 3 மணிக்கு - வேலூர் - ஆசிரியர் இல்லம் - இராசா திரையரங்கம் அருகில் தொடர்புக்கு: ========== தோழர்.செவ்வேள் 9786430428 ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை போராட்டங்கள்

மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து இன்று நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம். ஏழு தமிழர் விடுதலையைத் தடுக்கிற மோடியின் பாஜக அரசினைக் கண்டித்தும், ஈழ விடுதலையைத் தடுக்கும், மீனவர் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்கும், 20 தமிழர் படுகொலைக்கு நீதியை மறுக்கும், காவிரி உரிமையை மறுக்கும், மீத்தேன் திட்டத்தை திணிக்கும், இந்தியையும், இந்துத்துவத்தையும் திணிக்கும், நில அபகரிப்புச் சட்டத்தினால் விவசாயிகளின் வாழ்க்கையை அபகரிக்கும் தமிழின விரோத மோடியின் பாஜக அரசின் கொள்கைகளை கண்டித்து தோழர் கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. -தந்தை பெரியார் திராவிடர் கழகம்-மே பதினேழு இயக்கம்-தமிழர் விடியல் கட்சி. ...
ஆர்ப்பாட்டம் போராட்டங்கள்

தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – பதாகை

தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி ஆர்பாட்டம். ஈழவிடுதலைக்கு எதிராக சிங்களத்துக்கு உதவி, 7 தமிழர் விடுதலைக்கு எதிரான நிலைப்பாடு, காவேரியில் கருநாடக அணை கட்ட ஆதரவு, நில அபகரிப்பு மசோதா, தமிழக மீனவர் வாழ்வுரிமைக்கு எதிரான நிலைப்பாடு, கச்சத்தீவு மீட்பு எதிர்ப்பு நிலை, இந்தி - இந்துத்துவ திணிப்பு, மத்திய அரசு அதிகாரத்தை வலுப்படுத்தி மாநில உரிமைகளை மறுத்தல், என்று பல வழிகளில் தமிழின எதிர்ப்பு நிலைப்படுகளை அமுல்படுத்தி வெளியுறவு கொள்கை, உள்துறை-பொருளாதாரக் கொள்கைகள் என அனைத்திலும் தமிழின விரோதிகளாக செயல்படும் பாஜக அரசின் இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருவதை கண்டித்து கருப்பு கொடி ஆர்பாட்டம். தந்தைப்பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர். கோவை.ராமகிருட்டிணன் தலைமையில், தமிழின விரோதபோக்கை கண்டித்து மோடிக்கு 07 08 2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம். த.பெதிக தோழர்களும், மே17 தோழர்களும்,தமிழர் விடியல் கட்சி தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் நடத்தும் போராட்டத்தில் பங்கெடுக்க அழைக்கிறோம். இடம்: பனகல் மளிகை, சைதாப்பேட்டை தமிழின விரோத அரசிற்கு நம் எதிர்ப்புகளை பதிவு செய்வோம். அனைவரும் ஒன்று திரள்வோம். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - மே பதினேழு இயக்கம்-தமிழர் விடியல் கட்சி ...
பரப்புரை போராட்டங்கள்

மது ஒழிப்பு போராட்டம்

தற்போது எழுச்சி பெற்றிருக்கும் மது ஒழிப்பு போராட்டம் பல வடிவங்களில் எழுந்து நிற்கிறது. 1. தேர்தல் சார்ந்த அரசியல் கட்சிகளால் ஒருங்கிணைக்கப்படும் போராட்டங்கள். 2. புரட்சிகர இயக்கங்களால்/அரசியல் இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். 3. அரசியல் கட்சி/இயக்கம் சாராத மாணவர்கள், பொதுமக்கள், சமூக நல இயக்கங்கள், தனிநபர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். 4. இவை மட்டுமல்லால், மிக முக்கியமாக அய்யா.சசி பெருமாளின் குடும்பத்தினர் நடத்தும் உணர்ச்சிமயமிக்க உறுதியான போராட்டம். இதில் ஏதேனும் ஒன்றில் பங்கெடுங்கள். அல்லது துணை செய்யுங்கள். பரப்புரை செய்யுங்கள். கைது செய்யப்படுபவர்களுக்கு ஆதரவாக எழுந்து நில்லுங்கள். போராட்டத்தில் பங்கெடுக்காதவர்கள், இயலாதவர்கள் தங்களால் இயன்ற கருத்துப் பரப்பலுக்கு நேரத்தை, தனது முகநூலை பயன்படுத்துவது போராடும் தோழர்களுக்கு பேருதவியாக அமையும். அய்யா.சசிபெருமாள் அவர்களின் போராட்ட கள மரணம் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது, இந்த எழுச்சியை பாதுகாக்கவேண்டும், வளர்க்க வேண்டும், போராட்டத்தை ஒடுக்க அரசு வன்முறை, அவதூறுகளை, பொய் வழக்குகளை, முன்னெச்சரிக்கை கைது நடவெடிக்கைகளை, கொடூரமான தாக்குதலை, வன்முறையை கட்டவிழ்த்திருக்கிறது. இது மக்கள் மயமாகி நிற்கும் போராட்டம். மக்களின் கோரிக்கைக்காக அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கும் போராட்டம். இதில் அனைவரும் ஒற்றைக்குரலில் அரசிற்கும், அதன் கொள்கைகளுக்கும், அதன் காட்டுமிராண்டி அடக்குமுறைகளுக்கும் எதிராக நிற்பதுவே நேர்மையான அரசியல் நடவெடிக்கை. பிறவிடயங்களைப் பேச கால வசதிகள் உண்டு. ஆனால் இன்று எழுந்திருக்கிற எழுச்சியை மீண்டும் ஒரு தியாகத்தின் மூலம் கொண்டுவருவது கூட சாத்தியமில்லாமல் போகலாம். உலகின் பிற பகுதிகளில் நிகழும் மக்கள் திரள் போராட்டம் போல பெரும்திரளாய் எழுந்து சாலைகளை நிரப்புவோம் எழுந்து நிற்போம், போராடுவோம், பரப்புரை செய்வோம். ...
பொதுக்கூட்டம்

ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி நடந்த சிறப்பு கூட்டம்

நேற்று 24.07.15 மாலை சென்னை தி. நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சிறப்புக்கூட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.அதில் மே 17 இயக்கமும் கலந்துகொண்டது.இதில் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் SDPI தலைவர் திரு.தெகலான் பாஹவி த.பெ.திக தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன் தபெ.திக துணை தலைவர் திரு.வழக்கறிஞர் துரைசாமி தபெதிக பொதுச்செயலாளர் திரு.கோவை இராமகிருஷ்ணன் இயக்கனர் திரு.புகழேந்தி தங்கராஜ் மே 17 இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு மரணதண்டனைக்கு எதிராகவும், ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலைக்கும் குரல் கொடுத்தனர். ...
தனியார்மயம் போராட்டங்கள் மே 17

போரூர் ஏரியைக் காக்க மனித சங்கிலிப் போராட்டம்

போரூர் ஏரியை காக்க நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தோழர்கள் ஆற்றிய உரை ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

போரூர் ஏரியை காக்க போராட்டம் – விவாத காணொளி

போரூர் ஏரியை காக்க மே 17இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் விவரிக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...