போரூர் ஏரியைக் காக்க மனித சங்கிலிப் போராட்டம்

போரூர் ஏரி மூடப்படுவதை தடுத்து காத்திடவும், தமிழகத்தின் தண்ணீர் வளங்களை பாதுகாக்கவும் போரூர் குன்றத்தூர் சாலையில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று மாலை (25-07-2015) மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. நிலத்தடி நீரை தனியாருக்கு தாரை வார்க்கும் தேசிய தண்ணீர் மசோதா 2012 னை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி உள்ளிட்ட தோழர்கள், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருங்கிணைந்த அம்பேத்கர் மக்கள் இயக்கத் தோழர்கள், கோயம்பேடு சந்தையின் வியபாரிகள்,திருநங்கை தோழர்கள், சமூக ஆர்வலர் கி.நடராசன் உள்ளிட்டோரும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் திரளாக கலந்து கொண்டனர். அனைவரும் போரூர் ஏரியை விரிவுபடுத்தக் கோரியும், வளர்ச்சி என்ற பெயரில் நீர் வளங்களை அழிப்பதை நிறுத்தக் கோரியும், நமது வீட்டு தண்ணீருக்கு தனியாருக்கு பணம் கட்ட சொல்லும் தண்ணீர் மசோதாவை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

20009_1139261329424658_4164338163529882415_n 11053357_1139260992758025_8449942338834066258_n 11178370_1139261396091318_4791020937706528183_n 11200777_1139261316091326_3140685241112733388_n 11224115_1139261162758008_8371445207300480438_n 11247600_1139261099424681_1061061828917191019_n 11693961_1139260989424692_8145199898202805806_n 11693993_1139261406091317_2699764704260747506_n 11694929_1139261322757992_7258313691355355905_n 11703349_1139261002758024_3198986161308824903_n 11707458_1139261139424677_3870072552590914634_n 11742828_1139260842758040_5853044870902671247_n 11742896_1139260892758035_6586129535726447514_n 11745379_1139261319424659_6879667481279291122_n 11745883_1139261009424690_1698717365360639534_n 11750664_1139260846091373_2674388262801563835_n 11750690_1139261082758016_3106482867788002484_n 11752539_1139261036091354_5203045058992880511_n 11755101_1139261042758020_7896112462774185786_n 11781675_1139260839424707_163409647493952933_n 11800181_1139261199424671_4050605875138766086_n 11800583_1139260849424706_516582233233912329_n