மே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.

மே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.

மே பதினேழு இயக்கத்தின் பத்திரிக்கையான மாத இதழினை கொண்டு வந்திருக்கிறோம். இதுவரை இரண்டு இதழ்களை வெளியிட்டிருக்கிறோம். மூன்றாம் இதழ் இன்னும் மூன்று நாட்களில் வெளிவந்துவிடும்.

பல்வேறு முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து கொண்டு வருகிறோம். ONGC-ன் திட்டங்களை விளக்கும் கட்டுரை, மாட்டுக்கறி தடையின் பின்னே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய பொருளாதாரக் காரணிகள், நிதி மசோதாவின் ஆபத்துகள், காவிரி நீர் சிக்கல், ரேசன் கடைகள் மூடப்படுவதன் பின்னுள்ள சதிகள், மோடி ஆட்சியின் மூன்று ஆண்டுகால வெளியுறவுக் கொள்கையின் தோல்வி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னிருக்கும் சர்வதேச அடியாட்கள், மோடியின் இலங்கைப் பயணம் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை முதல் இரண்டு இதழ்களில் கொண்டுவந்திருக்கிறோம்.

மே பதினேழு இயக்கத்தின் அரசியலைப் பேசும் ஊடகமாகவும், தமிழகத்தின் வாழ்வாதார அரசியல் சிக்கல்களை ஆய்வுக்குட்படுத்தும் ஆய்விதழாகவும், ஈழ இனப்படுகொலைக்கு பின்னான சர்வதேச நகர்வுகள், இந்திய அரசின் மக்கள் விரோத் பொருளாதாரக் கொள்கைகள், சுற்றுச் சூழல் பிரச்சினைகள், சாதிய வன்கொடுமைகள் என அனைத்தையும் குறித்து தமிழர்களின் குரலாய் “மே பதினேழு இயக்கக் குரல்” தொடர்ந்து ஒலிக்கும்.

அனைத்து தோழர்களும் இந்த இதழின் ஆண்டு சந்தாதாராக மாறவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஆண்டு சந்தாரர்களுக்கு மாதந்தோறும் இதழ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஆண்டு நன்கொடை ரூ.400.

இதழை நேரடியாக வீட்டிற்கு தபால் மூலம் பெற விரும்பும் தோழர்கள் 7299968999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

(பணம் செலுத்திய தோழர்கள் செலுத்திய பரிவர்த்தனை விவரங்களையும், உங்கள் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் மறக்காமல்
kural@may17iyakkam.com
contact.may17@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். அப்போதுதான் உங்கள் வீட்டிற்கு இதழ் தொடர்ந்து வருவதை எங்களால் உறுதிபடுத்த முடியும். பணம் அனுப்பிய தோழர்களுக்கு இதழ் கிடைக்காத பட்சத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளவும்.)

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply