அமெரிக்காவின் நரித்தனமும் அழிக்கப்படும் தமிழர் கோரிக்கையும்

கடந்த ஆகஸ்ட் 25’2015 அன்று திரிகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் பேசிய இலங்கையின் அதிபர் சிறிசேன. சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். உடனே இதற்குதான் காத்திருந்ததை போல அன்றே அமெரிக்கா இப்போதைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை சம்பூர் http://www.tamilguardian.com/article.asp?articleid=15681 பகுதி நல்லிணக்கத்திற்க்காக கொடுக்கிறோமென்று கொடுத்தது.

அமெரிக்கா இப்போது உதவுவதாக சொன்ன இடம் உள்ள மாவட்டம் திரிகோணமலை. அமெரிக்காவின் நீண்ட கால கனவு அந்த திரிகோணமலை. விடுதலை புலிகளை அமெரிக்க கொல்ல வேண்டுமென்று நினைத்தற்கு திரிகோணமலையும் ஒரு காரணம். தனது நீண்டகால கனவான திரிகோணமலையை அடையும் திட்டத்திற்கு புலிகள் இடையூறாக இருப்பார்கள் என்றுதான் இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளை ஒரு முற்றுகைக்கு உள்ளாக கொண்டு வந்து அந்த திரிகோணமலையை அடையும் ஒப்பந்தத்தை கோத்தபய இராசபக்சே மூலம் தனதாக்கிக் கொண்டது அமெரிக்கா இது கடந்த கால வரலாறு.

இப்படி அமெரிக்காவிற்கு தேவையான இடத்திற்குதான் 1மில்லியன் அமெரிக்க டாலரைகொண்டு உதவுகிறோமென்று சொல்லியிருக்கிறது. அதுவும் யார் மூலமாக என்பது தான் மிகமுக்கியமானது. அதாவது United States Agency for International Development (USAID) என்ற அமைப்பு மூலமாக இந்த உதவிகள் கிடைக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். இந்த அமைப்பு தான் ஏற்கனவே ஈழத்தமிழர்களிடம் நீங்கள் அமெரிக்கா கொண்டுவருகிற நல்லிணக்க தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்வதாக வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஐநா மனித உரிமை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ஏற்கனவே மே 17 இயக்கம் ஆகஸ்ட் 10ஆம் தேதியே உண்மையை விளக்கி எழுதியிருந்தோம்.https://www.facebook.com/photo.php?fbid=1131996400148645&set=a.160357610645867.40565.100000148884206&type=1&theater

இப்படிப்பட்ட அமைப்பின் மூலம் கொடுக்கும் பணம் எதற்காக போகுமென்று நாம் எளிதில் ஊகிக்கமுடியும். ஏற்கனவே சர்வதேச விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையை போதும் இதைதான் அமெரிக்க தீர்மானமாக வருகின்ற செப்டம்பரில் முன்மொழியுமென்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்து விட்ட நிலையில். இதற்கு எதிராக தமிழர்கள் போராடிவிடகூடாது என்பதற்காகவே இந்த பணம் பயன்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் இயல்பாக நமக்கு ஏற்படுகிறது. இதுபோக மேலும் அமெரிக்கா 3.3மில்லியன் டாலர் பணத்தையும் நல்லிணக்கத்திற்காக கொடுக்கபோவதாகவும் அதில் பள்ளிகள் கட்டித்தர போவதாகவும் சொல்லியிருக்கிறது. http://www.tamilguardian.com/article.asp?articleid=15765

இதுபோக கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கைக்கு 10மில்லியன் அமெரிக்க டாலர் பல்வேறு வளர்ச்சிக்கு அமெரிக்க கொடுத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பணத்தில் என்னென்ன முன்னேற்றங்கள் இதுவரை தமிழர்களுக்கு இலங்கை அரசு செய்திருக்கிறது என்று சொல்லவில்லை.ஒருவேளை ஒன்றுமே செய்யவில்லையோ என்னவோ?

ஆக மொத்தம் இலங்கையை சர்வதேச அழுத்ததிலிருந்து காப்பாற்றவும், தனது நலனை தெற்காசிய பகுதியில் நிலைநிறுத்தவும் ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்ததோடு இல்லாமல் இன்று அவர்களின் கோரிக்கையையும் அழிக்க முனைப்பாக இயங்குகிறது அமெரிக்கா.

இதனை தடுத்து நிறுத்தி அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தினை அம்பலப்படுத்தாமல் தமிழர்களுக்கு விடிவில்லை.ஆகவே தோழர்களே அணிதிரளுங்கள் அமெரிக்காவிற்கு எதிராக செப்டம்பர் 11’2015 சென்னையிலுள்ள அமெரிக்க துணைத்தூதரகம் முற்றுகையிடுவோம் மற்றும் அமெரிக்காவின் மீது தமிழர்கள் நாம் பொருளாதார போர் தொடுப்போம். வாருங்கள் தோழர்களே!

குறிப்பு: படம் இலங்கைக்கு அமெரிக்கா 3.3மில்லியன் அமெரிக்க டாலர் கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் 31.08.2015அன்று கையெழுத்தான போது எடுக்கப்பட்டது.

11924217_1161061853911272_8890854781231700416_n

 

11951253_1160679557282835_7062605990389756930_n poster1

Leave a Reply