தமிழர் (இந்திய) கடலும் ஈழத்தமிழர் சிக்கலும்

நேற்றைய ஹுந்து ஆங்கில பதிப்பில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்குவது குறித்தான பேச்சுவார்த்தை செப்.1 முதல் 3 வரை நடைபெறும் என்று ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் மிகமுக்கியமானது இந்திய பெருங்கடல் குறித்து ஆஸ்திரேலியா அமைச்சர் சொன்னது அதாவது

//By 2030, the Indo-Pacific region is expected to account for 21 of the top 25 sea and air trade routes; around two-thirds of global oil shipments; and one third of the world’s bulk cargo movements. So improving security will be crucial to protecting our prosperity. In this setting, it is not surprising that, being Indian Ocean states, defence engagement between Australia and India focuses on joint naval cooperation.
http://www.thehindu.com/opinion/op-ed/india-is-a-key-partner-in-indopacific-region/article7600487.ece // வரும் 2030 ல் இந்திய பெருங்கடலில் வழியாகத்தான் உலகில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் வணிகமும் மற்றும் மூன்றில் ஒரு பங்கு கப்பல் வணிகமும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .எனவே இந்த பெருங்கடலில் இரு முனைகளில் இருக்கும் நாங்கள் அது குறித்தான பாதுகாப்பை பலப்படுத்துவது எதிர்கால நடவடிக்கையாகுமென்று தெரிவித்திருக்கின்றார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தான் ஈழத்தமிழர்களின் தாயகமான தமிழீழமும் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டால் தான் ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையும் இன்று நடைபெற்று வரும் கோரிக்கை அழிப்பும் புரியும்.

இந்த கடலை கைப்பற்றுவதற்காக ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொன்றும் செய்யும் வேலையை ஏற்கனவே புத்தகத்தின் மூலமும் பல்வேறு கருத்தரங்கின் மூலமும் தமிழகம் முழுக்க மே 17 இயக்கம் கொண்டு சென்றிருக்கிறது.

இந்த கடலை கைப்பற்றுவதில் இன்று எல்லா ஏகாதிபத்திய நாடுகளையும் விட முன்னனியில் அமெரிக்கா இருக்கின்றது. இதனை இலங்கை, எகிப்து, மியான்மர், லிபியா போன்ற நாடுகளில் இன்று நடக்கும் பிரச்சனையையும் அதில் உலக பேட்டை ரவுடி அமெரிக்காவின் அத்துமீறல்களையும் கவனித்தாலே புரியும்.

இவ்வாறு தனது நலனுக்காக தொடர்ந்து பல்வேறு நாடுகளையும் அதிலுள்ள தேசிய இனங்களையும் வேட்டையாடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும் அதற்கு துணைபோகும் இந்தியாவுக்கும் உரைக்கும் படியாக எந்த பொருளாதார நலனுக்காக இவ்வளவு அக்கிரமங்களை அமெரிக்கா செய்கிறதோ அந்த பொருளாதாரத்தில் தமிழர்கள் நாம் கை வைப்போம். அதுவே இந்தியாவிற்கு நாம் (தமிழர்கள்) விடும் எச்சரிக்கையாக இருக்கும்.

இந்த கடல் எங்கள் (தமிழர்) கடல்
இங்கு ஏகாதிபத்தியத்திய நாட்டிற்கு இடமில்லை என்று உரைக்க சொல்வோம் .

செப்டம்பர் 11’2015 சென்னை அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை வாருங்கள் தோழர்களே!

மே 17 இயக்கம்

11924288_1160441843973273_397766668138853811_n 11947593_1160441813973276_4506295716592725545_n 11988504_1160441817306609_7307781759098592192_n

Leave a Reply