அறிமுகம்

- in மே 17

மே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு.

muthukumar-poster

 தமிழீழத் தமிழர்களின் விடுதலை உரிமையின் நியாயத்தினை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும், சர்வதேசத்தினால் மறுக்கபடும் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் சனநாயகபூர்வமான செயல்பாடுகளிலும், அறிவுச்சமூகச் சூழலிலும் செயல்படும் அமைப்பு. தமிழினப்படுகொலையின் பின்னால் இயங்கிய ஆற்றல்கள், நோக்கங்கள், நிறுவனங்கள், அரசுகள், தனி நபர்கள் என ஒட்டுமொத்த புரிதலை தமிழ்ச் சமூகத்திற்கும் பிற சமூகத்தில் ஏற்படுத்துவதும் இதனூடாக தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வினை கட்டி எழுப்புவதும் இதன் முதன்மைப் பணி. ஒரு இனப்படுகொலை என்பது விபத்தைப்போல நிகழவில்லை அது திட்டமிட்டே நிகழ்ந்திருக்கிறது. இது தமிழினத்திற்கு வர இருக்கும் ஆபத்துகளையும் அறிவிக்கவே செய்கிறது. இதை உணர்ந்து அதற்கான எதிர்வினைகளை அரசியல்-சமூக-பண்பாட்டுத்தளத்தில் ஏற்படுத்துவது மே பதினேழு இயக்கம் முதன்மை செயல்பாடாக அமைகிறது. இதனூடாக தமிழர்களிட்த்தில் ஒற்றுமையையும், ஒருமித்த அரசியல் செயல்பாட்டினையும் மே பதினேழு இயக்கம் ஏற்படுத்தும். தியாகி, மாவீரன். முத்துக்குமாரின் ஈகையினால் அரசியல் செயல்பாட்டுக்கு வந்த நாங்கள் மாற்று அரசியலை தமிழர்களிட்த்தே ஏற்படுத்துவோம். அதனூடாக தமிழின எதிர்ப்பு ஆற்றல்களை முறியடிப்போம். உலகமயமாக்கலையும் , ஏகாதிபத்திய  நோக்கங்களையும் முறியடிக்க களம் காணுவோம். இதன் முதற்படியாக சாதி மறுத்தச் சமூகத்தினையும் சாதி ஒழித்தச் சமூகமாகவும் தமிழினத்தினை  உருவாக்கும் வேலையினையும் மே பதினேழு இயக்கம் செய்யும். தமிழீழ விடுதலைக்கான அரசியல் அவசியத்தினை ஏற்படுத்துவது முதன்மை கோரிக்கையாக அமைந்தாலும் சர்வதேச தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்களுக்காகவும் போராடும் அமைப்பு மே பதினேழு இயக்கம். இது தமிழக தமிழர்களின் உதவியோடும், செயல்பாட்டு பங்களிப்போடும் இயங்குகிறது.  நேர்மையான முற்போக்கு அரசியல் சிந்தனையுடைய தோழர்களை தமிழினத்திற்கு பணியாற்ற தோழமையுடனும், உரிமையுடனும் முத்துக்குமாரின் நண்பர்களாய் அழைக்கிறோம். கைகோர்த்து களம் காணுவோம். நாம் வெல்வோம்.

972324_666737736677022_1132621216_n

Leave a Reply