17-மே-2015 மாலை 5 மணியளவில் சென்னையில் தமிழர் பெருங்கடலாம் மெரினா கடற்கரையில் தமிழினப்படுகொலையின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு கட்சிகள் இயக்கங்களை சார்ந்த தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு தமிழீழத்தில் இனப்படுகொலையான தமிழர்களை நினைவேந்தினர். நிகழ்வில் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவு தூண் அமைக்கப்பட்டு அதில் சுடர் ஏற்றப்பட்டது. அதன் அருகில் சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரன் உருவம் பதித்த பதாகை மண் மேடையில் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அதற்கு மலர்தூவியும் மெழுகுவத்தி ஏற்றியும் வீரவணக்கம் செலுத்தினர். அதன் பின்னர் அனைவரும் மெழுகுவத்தி ஏற்றி அதனை உயர்த்தி பிடித்தவாறு தமிழீழ விடுதலை கோரிக்கையை முன்வைத்தும் சர்வதேசத்தின் சதிகளை கண்டித்தும் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். தமிழர்களின் பண்பாடு சார்ந்த நிகழ்சிகளாக பறையிசை, இன எழுச்சி பாடல்கள், சிலம்பம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் நிறைவாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், வரலாற்று ரீதியாக தமிழர்கள் அடைந்த பின்னடைவுகளையும் அதற்க்கு காரணமாக இருந்தவற்றையும் மேலும் தொடர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டியதன் தேவைகளையும் விளக்கி உரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் தோழர்கள், சாதி மத வேறுபாடுகளை கடந்து தமிழீழ விடுதலைக்கு தொடர்ந்து போராடுவதற்கு பாலச்சந்திரன் உருவப்படத்தின் மீது உறுதிமொழி ஏற்றனர்
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்!
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்
Join in May 17 Movement
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின்தொடர
சமீபத்திய பதிவுகள்
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!
மே 17 February 27, 2023திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
மே 17 February 25, 2023“தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்” – கருத்தரங்கம்
மே 17 February 21, 2023போராட்டங்கள்
-
February 28, 20239:49
தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்
-
February 27, 20236:57
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!
-
February 21, 20235:47
“தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்” – கருத்தரங்கம்
-
February 18, 20238:40
தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்!
-
February 18, 20234:18
“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” – கருத்தரங்கம்