“காவிரி டெல்டாவை பாதுகாப்பது என்பது தமிழகத்தை பாதுகாப்பதாக அமையும். ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி டெல்டாவை பாதுகாக்க திரண்டு எழ வேண்டும். நீட் தேர்வாக இருந்தாலும், பெட்ரோலிய மண்டலமாக இருந்தாலும் தமிழகம் டில்லி அரசை வீழ்த்தும். காவிரி டெல்டா என்பது தமிழகத்தின் வாழ்வாதாரம். காவிரி டெல்டாவை அழிக்க கூடிய டில்லி அரசு நமக்கு தேவையே இல்லை. பெரும் போராட்டம் அறவழியில் நிகழ்ந்து இவர்களை வீழ்த்துகின்ற வேலையை தமிழக மக்கள் செய்துமுடிப்பார்கள். ஜல்லிக்கட்டில் எப்படி டில்லி அரசை இளைஞர்கள் பணிய வைத்தார்களோ, அதே போல இந்த பெட்ரோலிய மண்டலத்தையும் வீழ்த்தி காவிரி டெல்டாவை பாதுகாப்பதிலே மீண்டும் இளைஞர்கள் எழுச்சி பெற்று டில்லி அரசை வீழ்த்துவார்கள்.”
[fbvideo link=”https://www.facebook.com/mayseventeenmovement/videos/1801245869892864/” width=”500″ height=”400″ onlyvideo=”1″]– தோழர் திருமுருகன் காந்தி, 09-08-2017 அன்று தோழர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண் குமார் ஆகியோருடன் எழும்பூர் நினைவேந்தல் வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்து வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.