நேற்று 24.07.15 மாலை சென்னை தி. நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சிறப்புக்கூட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.அதில் மே 17 இயக்கமும் கலந்துகொண்டது.இதில்
மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல்.திருமாவளவன்
SDPI தலைவர் திரு.தெகலான் பாஹவி
த.பெ.திக தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன்
தபெ.திக துணை தலைவர் திரு.வழக்கறிஞர் துரைசாமி
தபெதிக பொதுச்செயலாளர் திரு.கோவை இராமகிருஷ்ணன்
இயக்கனர் திரு.புகழேந்தி தங்கராஜ்
மே 17 இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி
உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு மரணதண்டனைக்கு எதிராகவும், ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலைக்கும் குரல் கொடுத்தனர். ...
Archives for July 2015
Monthly Archives: July 2015
போரூர் ஏரியை காக்க நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தோழர்கள் ஆற்றிய உரை ...
போரூர் ஏரியை காக்க மே 17இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் விவரிக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
தமிழ்த்தேசியம் - காலத்தின் கட்டாயம் என்ற கருத்தரங்கம் தமிழ்த்தேச நடுவத்தின் சார்பில் ஜூலை 19 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியத்திற்காக தொடர்ச்சியாக நீண்ட காலமாக போராடி வரும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பரப்பப்படும் திரிபுவாதங்கள் குறித்தும், ஆரோக்கியமான தமிழ்த்தேசியம் எப்படி அமைய வேண்டும் எனவும் முக்கியமான உரை நிகழ்த்தினர். தோழர்கள் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் பொழிலன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத் தோழர் கி.வே. பொன்னையன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் தோழர் தமிழழகன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் அருள்முருகன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். மேலும் இக்கருத்தரங்கம் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற உள்ளது. ...

சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்