பிஜேபியின் மோடி அரசு ஒரு பக்கம் நஷ்டத்தை காரணம் காட்டி அரசு நிறுவனங்களை மூடப்பார்க்கிறது, மறுபக்கம் இருக்கிற அனைத்தையும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வாக்குது.

பிஜேபியின் மோடி அரசு ஒரு பக்கம் நஷ்டத்தை காரணம் காட்டி அரசு நிறுவனங்களை மூடப்பார்க்கிறது, மறுபக்கம் இருக்கிற அனைத்தையும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வாக்குது.

இரண்டு நாளைக்கு முன் தான் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நஷ்டத்தில் இயங்குகிறதென்று சொல்லி 54,451 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கையை எடுக்கப்போவதாக மோடி அரசு அறிவித்தது. தேர்தலுக்காக தற்போது இந்த நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னால் மே 17 இயக்கம் விரிவாக எழுதியிருந்தது. இது ஒரு புறமென்றால் 

மறுபுறம் இந்திய இரயில்வே துறையில் குறிப்பிட்ட சிலர் தங்களுக்குள் தகவலை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் 1.95லட்சம் தொலைபேசி இணைப்புகளுக்கான ஓப்பந்தத்தை தனியாருக்கு அதுவும் புதிதாக தொடங்கப்பட்ட ரிலையனஸ் ஜியோ நிறுவனத்திற்கு போன வருடம் கொடுத்திருக்கிறது. இதன் மதிப்பு மாதம் 100கோடி ரூபாய் ஆகும். https://www.businesstoday.in/…/reliance-j…/story/293200.html.
இந்த சேவையை அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லுக்கு பெற்றுக்கொடுத்திருந்தால் அது ஏன் நஷ்டத்தில் இயங்கபோகிறது? ஏன் அதிலிருக்கிற ஊழியர்கள் தங்களது வேலை இழக்கப்போகிறாகள்.

ஆக தனியார் முதலாளிகளை வாழவைக்க திட்டமிட்டு அரசு நிறுவனங்களை காவுகொடுக்கிறது பிஜேபியின் மோடி அரசு…

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply