உடுமலைப்பேட்டை சாதிவெறி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதிய ஆணவக் கொலையினைக் கண்டித்தும், சாதி மறுப்பு மணம் புரிந்தோரின் பாதுகாப்பை உறுதிபடுத்தாத அரசைக் கண்டித்தும், சாதிய ஆவணப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும் இன்று (22-3-2016) மாலை தமிழர் விடியல் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கோவை இராமகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பகலவன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் தோழர்கள் பங்கேற்றனர். இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் கண்டன உரையாற்றினார்.

Related Posts

Leave a Reply