Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
December 2009 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for December 2009

Monthly Archives: December 2009

Declare Srilanka as “Genocide Country” – Press Note இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும்  அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும்                      மே 17 இயக்கம் தமிழ்நாடு   2010ஜனவரி 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஈழத்தில் நடந்து முடிந்த இனஅழித்தலிற்குப்  பிறகு கூடும் இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. இதற்கு முந்தைய கூட்டத் தொடரானது ஜூன் – ஜூலை மாதங்களில் 26 நாட்கள் நடைபெற்றது.   இலங்கையில் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்படும்  தமிழினப் படுகொலையை உடனடியாகநிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள    வேண்டும் என்று வலியிறுத்தி “”அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப்பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்ற தலைப்பில் 2009 ஜனவரி 23 ஆம் தேதியன்று முதல்வர்தலைமையில் தீர்மானம் இயற்றி சரியாக ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில் கூடும் முதல்சட்டமன்றக் கூட்டத் தொடர் இது. இலங்கையில் நடந்த, இன்னமும் தடையின்றி நடத்தப்பட்டுவரும் தமிழ் இனப் படுகொலையில்முக்கியப் பங்காற்றியுள்ள ராஜபக்சாவும், சரத் பொன்சேகாவும் அந்த நாட்டில் ஜனவரி 26 ஆம்தேதியன்று நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்தத் தேர்தலுக்கு முன்பாகத்தமிழ் நாட்டில் கூடும் சட்டமன்றத் தொடர் இது என்பதால் இது வரலாற்று  முக்கியத்துவத்தைப்பெறும் ஒரு தொடராக அமைகின்றது. மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் மத்தியில் – இலங்கையா? ஈழமா? எதுஇனப் பிரச்சனைக்குத் தீர்வு – என்பதை அறியும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடந்து முடியவுள்ளநாட்களில் கூடும் சட்டமன்றத் தொடர் இது. அவர்களின் முடிவுக்கு உதவுவதற்கான தக்க நடவடிக்கைஒன்றைத் தமிழ்நாட்டு மக்களும், அவர்தம் அரசியல் பிரதிநிதிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இந்த சட்டமன்றத் தொடர் கூடுகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் ஈழத் தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டக்கூடிய ஒருநடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் அவர்களின் எதிர்காலம் நிரந்தரமானதொரு இருளைச்சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர வேண்டிய அவசியமான நேரம் இதுவே.     ஈழத் தமிழ் மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற கடந்த ஓராண்டுகாலமாகத் தமிழக சட்ட மன்றமும், அதில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகளும்தவறிவிட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்தக் கடைசி நேரத்திலாவது ஈழத்தில் வாழும்தமிழ் மக்களைக் காப்பாற்ற அவை என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான நேரம்இதுதான்.  அடுத்து வரும் நாட்களில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றும்  முயற்சியில் ஈடுபடும் முன்பாகக்கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளும், சட்டமன்றமும் இந்தப் பிரச்சினையில்எவ்வளவு தூரம் தன்னலம் மிகுந்தும், அசிரத்தையாகவும், பாராமுகமாகவும் இருந்து வந்துள்ளார்கள்என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில்,அடுத்துவரும் நாட்களிலாவது இந்தக் கடந்தகாலத் தவறை மீண்டுமொருமுறை செய்துவிடக்கூடாதல்லவா? ...