பிரிவு 147, பிரிவு 148, பிரிவு 341, பிரிவு 506/1, பிரிவு 188 அமைதியாக அறவழியில் 7 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்விற்காக கூடிய தோழர்களின் மீது, இந்தாண்டு இந்த பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
பிரிவு 147 – கலவரம் செய்ததாக சொல்லி உள்ளார்கள்
பிரிவு 148 – ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி கலவரம் செய்ததாக
பிரிவு 341 – பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது
பிரிவு 506/1 – சட்டவிரோத உள்நோக்கத்துடன் கூட்டத்தை கூட்டியது.
பிரிவு 188 – அரசு ஊழியரை மதிக்காமல் நடந்து கொண்டது.
மூன்று வயது குழந்தைகள் முதல் வயிற்றில் குழந்தைகளுடன் வந்த பெண்களுடன், வயதான முதியோர்களுடன் தனது ரத்த சொந்தங்கள் இழந்த சோகத்தில் ஏழு ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வந்த அதே மக்கள் மீது மேற்சொன்ன பிரிவுகளில் மோடி-எடப்பாடியின் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு வந்த அதிபயங்கர ஆயுதம் மெழுகுவர்த்தி. கிட்டத்தட்ட நிராயுதபாணியான எமது தோழர்கள் கண்ணீரையும் அரசியலையும் முழக்கமிட்டு முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன்வர்களுக்கு தமிழர் கடலில் மரபு வழியிலான நினைவை செலுத்த வந்தவர்கள்தான் கலவரம் செய்தவர்கள், ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தவர்கள், சட்ட விரோத உள்நோக்குடன் கூடியவர்கள், காவல்துறைக்கு(அரசு ஊழியருக்கு) மதியாமல் நடந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.
அன்பான தமிழர்களே! ஜனநாயக சக்திகளே! மேலே சொன்ன குற்றங்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தண்டனை. இந்த அரசின், இந்த காவல்துறையின் இம்முடிவை உங்கள் பொறுப்பிற்கே விட்டு விடுகிறோம்.
சாட்சிகளாக 7 ஆண்டுகள் நாங்கள் புரிந்த காட்சிகளை தொகுத்து புகைப்படங்களாக கொடுக்கிறோம். பாருங்கள். ஒன்று சேர்வோம்.