தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்

தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-2023 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!

தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்ய வேண்டும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசு கண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி. புதியராஜா உள்பட, பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தோழர்கள் என பலர் பங்கேற்று கைதாகினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply