பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள்

ஒரத்தநாடு கிளாமங்கலம் (தெ) கிராமத்தில் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பின் பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள் உரிய அதிகாரிகளிடத்தில் மே17 கொடுத்துள்ளது. அப்பட்டமான சாதிய காட்டுமிராண்டித்தனத்தினை மேற்கொண்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனே கைது செய்யப்பட வேண்டும். இக்கொடுமையை செய்பவர்களை மே 17 இயக்கம் துணிந்து எதிர்த்து நிற்கும். ஆழ வேரோடி நிற்கும் சாதிய இழிவை துடைத்து தமிழ்த்தேசியம் படைப்போம். சாதியை குடி என்று திரிப்பதால் சாதி நியாயமாகாது. இக்குற்றம் செய்தவர்களை கைது செய்யும்வரையில் மே 17 இயக்கம் தொடர்ந்து போராடும். கைகோர்ப்போம்.

Leave a Reply