மீண்டும் தமிழர் அரசியலில் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்ம் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மீண்டும் தமிழர் அரசியலில் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்ம்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

எரிக் சொல்ஹெய்ம், தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையின் அதிபரான இரணில் விக்ரமசிங்கேவின் காலநிலை மாற்ற சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது மிகவும் குறி்ப்பிடத்தக்கது.

எரிக் சொல்ஹெய்ம் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை முன்னெடுத்த அந்த காலகட்டத்தில் விடுதலை புலிகளை சுற்றிக் கடுமையான புலனாய்வு வலையமைப்பு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பின்னப்பட்டது. அந்த வலையத்திற்குள் சிக்கிக் கொண்டதால் தான் புலிகள் பின்நாட்களில் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.

“இந்தியப் பிரதமர் ஒருவர் வெளிநாட்டு சக்தியால் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதுபோல அமெரிக்காவின் ஜனாதிபதி மெக்சிகோவின் படையால் கொல்லப்பட்டதை சற்று நினைத்துப் பாருங்கள். இதற்காக அமெரிக்கர்கள் நிச்சயமாக ஒரு வலுவான வகையில் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகத்தான எதிர்வினையாற்றி இருப்பார்கள்” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இவர் மறைமுகமாக கூறுவது இந்தியாவும் ராஜீவ் கொலைக்கு இலங்கையுடன் இணைந்து தமிழீழத் தமிழர்களை கொன்று குவித்தது சரிதானே என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நார்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே, எரிக்கிடம் கோரிக்கை விடுத்தததும், அதற்கு நார்வே உதவிகளை வழங்கும் என எரிக் அவரிடம் உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி எரிக் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இவ்வாறான பின்னணியில் தான், மீண்டும் ரணில் விக்கிரமசிங், எரிக் சொல்ஹெய்ம்க்கு காலநிலை ஆலோசகராகப் பதவி கொடுத்து இருக்கிறார்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply