ஸ்டெர்லைட் படுகொலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசன் ஆணையம்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை அங்கிருந்த பூங்காவில் மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்று உள்ளது என்கிறது அறிக்கை.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக் கணக்கானவர்களில் படித்த இளைஞர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்து, சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அதோடு இரவு நேரத்திலும் வீடுகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டிருக்கின்றனர்.
மே 22, 2018 அன்று, உயிரிழப்புகள், சொத்துகள் சூறையாடப்பட்டது போன்ற சம்பவங்கள் நடைபெறும் வரை உளவுத்துறையின் தகவல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மாவட்ட ஆட்சியர் தனது சாட்சியத்தில் கூறியிருப்பது முற்றிலும் வியப்பை ஏற்படுத்துகிறது.
ஆணையத்தின அறிக்கையில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், அவர்கள் அவ்வாறு உத்தரவிடுவதற்கு என்ன நோக்கம், சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு வந்தது ஏன் போன்ற கேள்விகளுக்கான பதில் இல்லாதது ஏமாற்றமே!.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு என்பது மோடியின் நெருங்கிய நண்பரான அனில் அகர்வாலின் வேதாந்த நிறுவனத்தை காப்பாற்ற மோடி அரசு, அதிமுக அரசை ஏவி அன்றைய தலைமை செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு பச்சைப் படுகொலையாக ஏன் இருக்கக் கூடாது என்கிற ஐயம் மேலோங்குகிறது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010