‘யூதாஸ்-பிளாக் மெசியா’ திரைப்படம் சொல்லும் கருப்பின போராட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

‘யூதாஸ்-பிளாக் மெசியா’ திரைப்படம் சொல்லும் கருப்பின போராட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஒரு துரோகச் செயலால் 1969-இல் பிளாக் பாந்தர் கட்சியின் ஃப்ரெட் ஹாம்ப்டன் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBI-யிடம் சகத் தோழனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்.

நீதி அமைப்புகளே உங்களை ஒரு மனிதனாக கருதாத நிலையில் கறுப்பின மக்களின் விடுதலையை தாங்களே முடிவு செய்கின்ற புரட்சிகர விடுதலை போராட்டத்தை துவங்குகிறார்கள். அந்த புரட்சிகர போராட்டத்தின் உச்சமே 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட “பிளாக் பாந்தர் கட்சி”.

அரசின் ஆயுத வன்முறைக்கு எதிராக அதன் வழியிலே பதில் அளித்து கறுப்பின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மால்கம் எக்ஸ் 1965-ல் கொல்லப்படுகிறார். பின்னர், ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களின் சமூக உரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் 1968-ல் கொல்லப்படுகிறார். முடிவுபெற்ற இந்த இரு கறுப்பின விடுதலை போராட்டக்காரர்களின் மத்தியில் தோன்றுகிறது புதிய விடுதலை போராட்ட ஒளி “ஃபிரெட் ஹாம்ப்டன்”.

FBI-இன் COINTELPRO பிரிவின் ஒரு தந்திர முறை “snitchjacketing”. snitchjacketing என்றால் அரசின் ஒற்றனாக அமைப்பிற்குள் ஊடுருவும் நபர், அமைப்பிற்குள் ஒரு நபரின் மீது அல்லது பலரின் மீது அவதூறுகளை கிளப்பி, சந்தேகத்தை உருவாக்குவது, பின் அமைப்பிற்குள் அவநம்பிக்கையை விதைத்து ஒட்டுமொத்தமாக அமைப்பை சீர்குலைப்பது.

கறுப்பின மக்களின் தேசிய விடுதலைக்கு போராடிய பிளாக் பாந்தர் அமைப்பின் ஃபிரெட் ஹாம்ப்டன் அவர்களை அமெரிக்க அரசு கொலை செய்ய தேர்ந்தெடுத்த ஆயுதம் என்பது வில்லியம் ஓ’நீல் எனும் கறுப்பினத்தவரையே துரோகியாக பயன்படுத்துவதாகும்.

இன்றைய சமூக ஆர்வலர்கள் இன ஒடுக்குமுறை மற்றும் வர்க்கச் சுரண்டலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுடன் போராடுகிறார்கள். ஆனால் ஃப்ரெட் ஹாம்ப்டனின் புரட்சிகர பார்வையானது, இன ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவ சுரண்டலை எவ்வாறு தனித்தனி பிரச்சனைகளாகக் கருதாமல், பின்னிப் பிணைந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படவேண்டும் என்பது பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.

கறுப்பின தேசிய விடுதலை அரசியல் எழுச்சியும், தூரோகத்தால் நடந்த வீழ்ச்சியையும் பேசும் “ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா” திரைப்படம் கறுப்பின மக்களை விடுதலையை நோக்கி ஒன்றிணைக்கும் போர் ஆயுதமாக உள்ளது.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply