தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற “இன உணர்வு கொள் தமிழா!!” – சுயமரியாதை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, “இன உணர்வு கொள் தமிழா!!” – சுயமரியாதை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், மே பதினேழு இயக்கம் சார்பாக சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் 27-09-2022 செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வில் மே பதினேழு இயக்கத் தோழர்களின் பறையிசை விண்ணதிரச் செய்தது. தொடர்ந்து தோழர் கீதா, தோழர் கணேசன், தோழர் அனு ஆகியோர் பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் பாடல்களை பாடினர். இடையே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் மாவீரன் திலீபன் ஆகியோருக்கு மேடையில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தோழர் சௌந்திரபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் தம்பி பிரபாகரன் துவக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து, தோழர் கொண்டல் சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் தமிழர் விரோத மனுதர்மத்தை விளக்கி சிறப்புரையாற்றினர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், இந்துத்துவ ஆர்எஸ்எஸ் தூக்கிபிடிக்கும் மனுதர்ம கொள்கைகள் எவ்வாறு தமிழர்களை இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கி விரிவுரையாற்றினார். தோழர் ஜெயக்குமார் அவர்களின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply