மதுவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மதுவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பெரும்பாலாலும் ‘கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாக’ பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக குடிபோதையில் பெண்களைக் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் அன்றாட நிகழ்வாகி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மது அருந்தும் கணவனால் மனைவி படும் துயரங்கள் சொல்லி மாளாது. தினமும் அடி உதைகளைத் தாங்கிக் கொண்டு திருப்பி அடிக்க முடிந்தாலும் அடிக்காத ஒரு அடிமையாக, ஒரு குடி நோயாளியின் மனைவி ஆகி விடுகிறார்.

கணவன் குடிக்கக் கூடாது என்ற பதற்றம் ஒரு புறம், கணவனை யாரும் எதுவும் தவறாக பேசிவிடக் கூடாது என்ற சுய மரியாதை மறுபுறம். இவை அனைத்திலும் சோர்ந்து விடாது கணவனை மதுவிலிருந்து மீட்கவும், சமூகத்தில் நிமிர்ந்து நன்னடை போடவும் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் ஒரு வகையில் போராளிகளே.

மதுவினால் பெண்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்புகளுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் மது குடிப்பதை அரசுகளும் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்து அரசின் வருமானத்திற்காக குடி மக்களின் வாழ்க்கை தரத்தையே சீரழிக்கின்றன.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply