பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்குவதற்காக நடத்தப்படும் என்.ஐ.ஏ வின் சோதனையும், அதன் தலைவர்கள் கைதும் கண்டிக்கத்தக்கது!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்குவதற்காக நடத்தப்படும் என்.ஐ.ஏ வின் சோதனையும், அதன் தலைவர்கள் கைதும் கண்டிக்கத்தக்கது! – மே 17 இயக்கம்

இந்துத்துவ பாசிச அமைப்பு தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டான 2025க்குள் இந்தியா முழுவதும் தனது பாசிசம் வேரூன்றி இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்துத்துவ பாசிச சக்திகள், தனது நோக்கத்திற்கு எதிராக யாரெல்லாம் இருப்பார்களோ அவர்களை முடக்கும் வேலையை செய்ய தொடங்கி விட்டது என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தொடர் தாக்குதலின் (சோதனை, கைது) வழியாக புரிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ச்சியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு மாநிலங்களில் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் அத்து மீறுவதும் அதன் தலைவர்களை எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் தேசிய புலனாய்வு முகமை என்ற சர்வ அதிகாரம் படைத்த அமைப்பின் மூலம் கைது செய்வதும் அதன் மூலம் வெகுஜன மக்கள் மத்தியில் இஸ்லாமிய எதிர்ப்பை உருவாக்கி அதன் மூலம் இந்துத்துவ பாசிச கட்டமைப்பை வலுப்படுத்த பிஜேபி நினைக்கிறது.

இந்துத்துவ பாசிச சக்திகளின் இந்த தாக்குதல் என்பது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்போடு நின்றுவிடப் போவதில்லை. பாசிசத்திற்கு எதிராக நிற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளின் மீதும் இது தொடரத்தான் போகிறது. இதனை சட்டத்தின் வழி செய்வதற்காக தான் தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல புதிய சட்ட திருத்தங்கள், மசோதாக்கள், சட்டங்கள் நாடாளுமன்றத்தின் வழியாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தொடக்கம் தானே ஒழிய, அது முடிவல்ல. அந்த பாசிச கரங்கள் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் அனைத்தின் மீதும் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்த இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆகவே இந்த அத்துமீறல்களை உடனடியாக கண்டிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் தார்மீக கடமை என்று மே 17 இயக்கம் நினைக்கிறது. இந்த நேரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு ஆதரவாக நிற்க வேண்டியது ஜனநாயகத்தின் கடமை என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தேசிய புலனாய்வு முகமையின் சோதனையையும், அதன் தலைவர்கள் கைதையும் மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply