கள நிலவரத்தை அறிய சென்ற நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதா? மே17 இயக்கம் கண்டனம்

கள நிலவரத்தை அறிய சென்ற நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதா? மே17 இயக்கம் கண்டனம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்து இன்றளவும் மர்மம் விலகாத நிலையில் அது குறித்து பத்திரிகையாளர்கள் என்ற முறையில் பல்வேறு பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில் நக்கீரன் புலனாய்வு இதழும் தங்களது பத்திரிக்கையின் சார்பாக செய்திகள் வெளியிடுவதற்காக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோரை களத்திற்கே அனுப்பிவைத்து பல்வேறு தகவல்களை அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று சர்ச்சைக்குரிய பள்ளி மீண்டும் புனரமைக்கப்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் மீது பள்ளி உரிமையாளரின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் ‘செய்தியா போடுகிற உன்னை என்ன செய்கிறோம் பார்’ என்று அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை சொல்லி திட்டியும், கொடூரமாக தாக்கியும் உள்ளனர்.

பத்திரிக்கையாளர்களை தாக்கும் இந்த போக்கு மிக ஆபத்தானது. இதன் பின்னணியில் பள்ளியை நிர்வகிக்கும் இந்துத்துவ கும்பல் இருப்பதாக தெரிகிறது. உண்மை தான் பக்கம் இருக்கிறது என்றால் ஏன் பத்திரிகையாளர்களை தாக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாக பொதுமக்கள் மத்தியில் எழத்தான் செய்யும். இது போன்ற தாக்குதல்கள் தமிழகத்தில் இனியும் தொடராமல் இருக்க தமிழக அரசு இதை இரும்புக்கரங்கொண்டு அடக்க வேண்டும்.
இந்துத்துவ சக்திகள் மீதான, குறிப்பாக கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மீதான காவல்துறையினரின், திமுக அரசின் மென்மையான போக்கு இன்று பத்திரிக்கையாளர்களை தாக்கும் சூழலுக்கு வழிவகுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடராது இருக்க, பத்திரிக்கையாளர்களை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply