தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையின் பல்வேறு இடங்களில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17 அன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மே பதினேழு இயக்கம் சார்பாக தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் எதிரில், முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, சேத்பட் பகுதி, அண்ணா சாலை அரசினர் தோட்டம் அருகில் ஆகிய இடங்களில் உள்ள பெரியாரின் சிலைக்கு பறையிசையுடன் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply