தமிழ் நாட்டு நிதி அமைச்சரை தாக்கிய பாஜகவினை வன்மையாக கண்டிக்கிறோம்! தொடரும் பாஜகவினரது ரவுடித்தனம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

தமிழ் நாட்டு நிதி அமைச்சரை தாக்கிய பாஜகவினை வன்மையாக கண்டிக்கிறோம்! தொடரும் பாஜகவினரது ரவுடித்தனம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த தமிழ் நாட்டை சேர்ந்த இராணுவ வீரர் இலட்சுமணன் என்பவரது உடலுக்கு தமிழ் நாடு அரசு சார்பாக மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாட்டின் நிதி அமைச்சர் மாண்புமிகு திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களது காரின் மீது செருப்பை வீசி தாக்க முயன்றுள்ளனர் பாஜகவினர். தமிழர் விரோத பாஜகவின் இந்த காட்டுமிராண்டி செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

உயிரிழந்த இராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை திருமங்கலத்திற்கு எடுத்துவர மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவ்வுடலுக்கு தமிழ் நாடு அரசு சார்பாக மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாட்டின் நிதி அமைச்சர் மாண்புமிகு திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது காரில் திரும்பும் போது, அங்கு குழுமியிருந்த பாஜகவினர் திட்டமிட்டு ஒரு பெண் உறுப்பினரை கொண்டு நிதி அமைச்சரது காரின் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவல்துறையினர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பாஜகவினால் தமிழ் நாட்டின் அமைச்சருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. அந்தளவிற்கு கீழ்த்தரமாக பாஜகவினர் நடந்துள்ளனர். அரசு மரியாதை செலுத்தும் நிகழ்வில் பாஜகவினர் பெருமளவில் கூடியது அமைச்சர் மீது இதுபோன்ற தாக்குதலை திட்டமிட்டு நடந்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்பதை அறிய முடிகிறது. கிடைத்த காணொளிகளும் அதையே உறுதிபடுத்துகின்றன.

நிதி அமைச்சர் மாண்புமிகு திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மீது பல்வேறு காரணங்களுக்காக பாஜகவினர் தனிப்பட்ட முறையில் விரோத மனப்பான்மையை வளர்த்து வந்துள்ளனர். குறிப்பாக ஒன்றிய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களது சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், குடிமக்களை மீது பாரம் ஏற்றும் ஜிஎஸ்டி வரிக்கொள்கை குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தவர். ஒரு மாநில நிதி அமைச்சர் ஒன்றிய நிதி அமைச்சருக்கு பாடம் எடுக்க வேண்டிய நிலையை வட இந்திய ஊடகங்களே சுட்டிக்காட்டியுள்ளது. இதுவே அவர் மீது தாக்குதல் நடத்த அடிப்படை காரணமாக இருந்துள்ளது.

தமிழ் நாட்டில் காவல்துறையினர் முன்னிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரை தாக்க முடியும் என்ற நிலை மிகவும் ஆபத்தானதாகும். அமைச்சருக்கே இந்நிலை என்றால் சாதாரண குடிமக்களை பாஜகவை சேர்ந்த ரவுடிகள் எவ்வளவு மோசமாக அணுகுவார்கள் என்பதை திமுக அரசும், காவல்துறையும் உணர வேண்டும். அமைச்சர் மீது தாக்குதலில் ஈடுபட்ட பெண் உட்பட இச்செயலுக்கு உடந்தையாக இருந்த பாஜகவினர் அனைவரையுமே கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

தமிழ் நாட்டு அரசியலில் முன்னெப்போதும் இல்லாத, உத்திரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் நிலவும் இழிவான் அரசியலை பாஜக இறக்குமதி செய்கிறது. அமைச்சர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் பாஜகவின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பாஜகவின் அட்டூழியங்களை தமிழர்கள் ஜனநாயகரீதியில் எதிர்கொண்டு, பாஜகவை தமிழக மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply