திருப்பூரில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி

திருப்பூரில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி – மே பதினேழு இயக்கம்

திருப்பூர் ’15 வேலம்பாளையம்’ பள்ளிவாசலை மூட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர். அந்த பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்படுவதாக இந்து முன்னணியின் தூண்டுதலின் பெயரில் வழக்கு தொடரப்பட்டு பள்ளிவாசலுக்கு எதிராக தீர்ப்பை பெற்றனர். இதனால், பள்ளிவாசலில் யாரும் தொழுகை நடத்தக்கூடாது என்று பள்ளிவாசலை சீல் வைக்க கடந்த 30-06-2022 அன்று காவல்துறையினர் முயன்றனர். இதனை எதிர்த்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் 01-07-2022 மாலை சந்தித்து பிரச்சனை குறித்து கேட்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். அதன்பின், மாவட்ட ஆட்சியரையும் மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து இஸ்லாமியருக்கு எதிரான பள்ளிவாசல் பிரச்னை குறித்தும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் தோழர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசு பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி அதற்கான தீர்வுகளை ஆராய வேண்டும். பொதுவாக எங்களை போன்ற அமைப்புகள் சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம். மதத்தின் அடிப்படையில் எந்த வித பதற்றமும் நிகழக் கூடாது என்று அக்கறை எங்களுக்கு இருக்கிறது. இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திருப்பூர் நகரம் பாதுகாக்கபட வேண்டும். திருப்பூர் நகரத்தில் இந்த பிரச்னைகளை பெரிதாக மாற்றி பாரதிய ஜனதா கட்சியோ, இல்லை இந்து முன்னணியோ, ஆர்எஸ்எஸ் அமைப்புகளோ, ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்த நபர்களோ இந்த நகரத்தின் அமைதியே சீர்குலைத்திட கூடாது என்பதில் எங்களுக்கு கவலையும் அக்கறையும் இருக்குறது. எனவே அதிகாரிகள் இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அனைவரும் ஏற்று கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஏற்று கொள்ளா கூடியதாக இருக்க வேண்டும்.

கோவில்கள், பள்ளிவசல்கள் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற வரையறை வைக்கிறீர்கள் என்றால் எல்லா மதத்திற்கும் ஒரே மாதிரியான வரையறை வைக்க வேண்டும். அப்படியான ஒன்று நம் நாட்டில் இல்லை. பொதுவாக அவரவர் வசதிக்கு ஏற்றவாறு வழிபாட்டு தலங்களை ஏற்படுத்தி கொள்ள கூடிய நாடு தான் இந்திய நாடு. அதை அனுமதிக்கும் இடத்தில் தான் அரசுகள் இருக்கிறது. பொது விதியை அனைவரும் கடைபிடித்தால் அனைவருக்கும் நல்லது. ஆகவே அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுவான விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டுவதால் சமூக ஒழுங்கு சீர்கெடுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் அதற்கு அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக இருந்து விடக்கூடாது என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. வழிபட்டு தலங்கள் குறித்தான நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அதன் பின்பு பொதுவான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மே 17 இயக்கத்தின் கருத்து.

அரசு அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் கடவுள்களின் படங்களும், கோவில்களும் இருக்கிறது. வருடா வருடம் இந்துத்துவவாதிகளால் தெருவுக்கு தெரு நடத்தப்படும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கு எந்த தடையும் இல்லை. இந்துத்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில்களுக்கு இந்த மாதிரியான எந்த நடவடிக்கையும் இல்லை. விநாயகர் சதுர்த்தி, பாத யாத்திரை என்று சொல்லி கலவரங்கள் தான் நடக்கிறது.” என்று செய்தியாளர்களிடையே கூறினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply