ஈழத் தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகை போராட்டம்

ஈழத் தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைத்த திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் இன்று (29-06-2022 புதன்) காலை நடைபெற்றது. நீதிமன்ற காவலாகவும் இல்லாமல், சிறைத்துறையின் கீழும் வராத சட்டவிரோதமானதாக செயல்படும் முகாமை இழுத்து மூடி, ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் ஆகியோருடன் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் இம்முற்றுகை போராட்டத்தில் கைதாகினர்.

போராட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி.
Channel 7 India இணைப்பு

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply