மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டை பேரணி, வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு 29-05-2022 ஞாயிறு மாலை மதுரையில் நடைபெற்றது. மதுரை காளவாசல் பகுதியில் தொடங்கிய பேரணி மாநாடு நடைபெறும் பழங்காநத்தம் பகுதியில் முடிவடைந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் நூற்றுக்கணக்கான தோழர்கள் மே 17 இயக்கக் கொடியினை ஏந்தி, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து அணிவகுத்து சென்றனர். பேரணி அணிவகுப்பின் போது மே 17 இயக்கத்தின் பறையிசைக் குழு பறையிசை வாசித்துக்கொண்டு கொண்டும், தோழர்கள் வழிநெடுக புரட்சிகர முழக்கங்களை எழுப்பிக்கொண்டும் சென்றனர். மாநாட்டில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பாசிச ஒழித்துகட்ட ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply