தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை மே 22 ஞாயிறு மாலை 4 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த மே பதினேழு இயக்கம் திட்டமிருந்தது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அடக்குமுறையை மீறி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் என்றும் எந்நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்றும் உறுதிபட அறிவித்திருந்தோம். இதற்காக, சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையில் அருகில் ஒன்றுகூடி கடற்கரையை நோக்கி நினைவேந்த செல்வோம் என்று மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுத்திருந்தது.

அதன்படி, மே 22 மாலை 4 மணியளவில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பமாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே ஒன்றுகூடினர். தோழர்கள் பறையிசைமுழங்க, கூடியிருந்த மக்கள் தமிழீழ விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பினர். நினைவேந்தல் நிகழ்த்துவதற்காக மக்கள் கடற்கரையை நோக்கி அணிவகுத்து செல்கையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகவியலாளர்களிடையே ஈழம் குறித்த திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலத்தினார். தடையை மீறி நினைவேந்தல் நடத்த சென்றதாக பெண்கள், குழந்தைகள் என அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

அடக்குமுறைக்கு மத்தியில் கைதாகிய நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மண்டபத்திலேயே நடத்தினர். நினைவேந்தல் நடத்த தடை இருப்பதை அறிந்திருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தோடு பங்கேற்று கைதாகினார்.

மே பதினேழு இயக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்று மக்களுடன் கைதாகினர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னியரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர் கே.எம்.சரீப், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தமிழ்தேச நடுவத்தின் தோழர் கண குறிஞ்சி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளமாறன், திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலை கழத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, ஆம் ஆத்மி கட்சியின் தோழர் வசீகரன், தோழர்கள் ரசாக், கெளஸ், நிலவழகன், கயல், மகிழினி மணிமாறன், புலவர்.ரத்தினவேலு, வழ.ரஜினிகாந்த், எழுத்தாளர் மஞ்சுளா உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் பங்கேற்று அடக்குமுறைக்கு எதிராக நின்றார்கள்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகவியலாளர்களிடையே பேசிய காணொலி.

யூடியூப் இணைப்பு

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply