தமிழீழ இனப்படுகொலைக்கான 13ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் பேரறிவாளன் அவர்கள் விடுதலை குறித்தும் நடைப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கான 13ஆம் ஆண்டு நினைவேந்தல் குறித்தும் பேரறிவாளன் அவர்கள் விடுதலை குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இன்று (18-05-2022) மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஊடகவியலாளர்களிடையே பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஒதுக்கிய அரசிற்கு நன்றி தெரிவித்து, வரும் மே 22 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

மேலும், பேரறிவாளன் அவர்களின் விடுதலை மகிழ்ச்சியானது என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் அதிகாரத்தை எடுத்துக்கூறியுள்ளது என்றும், மற்ற 6 பேரின் விடுதலையையும் உறுதி செய்வதாக கூறிய முதலமைச்சரின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தோழர் திருமுருகன் காந்தி பேசினார். ஊடகவியலாளர்களிடையே இனிப்பு பகிரப்பட்டு பேரறிவாளன் அவர்களின் விடுதலை கொண்டாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் தோழர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply