பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு

பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டம் திரும்பப்பெறப்பட்டு, அந்த நிறுவனம் கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சனநாயக அமைப்புகள் சார்பாக இன்று (12-05-2022 வியாழன்) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

“பீமா கோரேகான் வழக்கு என்ற பெயரில் பாஜக அரசு தீட்டியுள்ள சதியை அம்பலப்படுத்தவும் கேலிக்கூத்தாகியுள்ள நீதிக்கு பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொணரவும் ‘பீமா கோரேகான் அரசியல் சிறைபட்டோர் விடுதலைக்கான குழு’ உருவாக்கப்பட்டுள்ளது. எல்கர் பரிசத் வழக்கில் சிறைப்பட்டுள்ள அறிவாளிகள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களின் அப்பழுக்கற்றத் தன்மையை வெகு மக்களிடையே பரப்புவதிலும் அவர்தம் உடனடி விடுதலைக்கான கோரிக்கையை எழுப்புவதும் இக்குழு நோக்கமாக கொண்டுள்ளது.” என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

குறிப்பு: பத்திரிக்கை செய்தி வெளியீடு படங்களாக இணைக்கப்பட்டுள்ளது.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply