தியாகி இம்மானுவேல் பேரவை பொறுப்பாளர், ஐந்திணை மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், தோழர்.புலிப்பாண்டி அவர்களுக்கு மே17 இயக்கத்தின் வீரவணக்கம்

- in வீரவணக்கம்

தியாகி இம்மானுவேல் பேரவை பொறுப்பாளர், ஐந்திணை மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், களப்போராளி, நெஞ்சிற்கினிய தோழர்.புலிப்பாண்டி இயற்கை எய்தினார் என்பதை ஏற்க இயலவில்லை. தமிழ் தேசியம்,சாதி ஒழிப்பு, பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய சிந்தனையோடு தமிழின விடுதலைக்காக போராடிய ஆற்றல்மிகு தோழரின் இழப்பு ஈடு செய்யக்கூடியதல்ல. இந்துத்துவ மயமாக்கம், பட்டியலின வெளியேற்றம், ஈழப்படுகொலைக்கு எதிராக தொடர் போராட்டம், பிரச்சாரத்தை மேற்கொண்டவர். தென்மாவட்டங்களில் துணிச்சலோடு சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு போராடிய தமிழ்த்தேசிய தோழருக்கு மே17 இயக்கத்தின் வீரவணக்கம்.

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்

Leave a Reply