தமிழக நலன்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர். என். ரவியை தமிழகத்தை விட்டு வெளியேறக் கோரி முற்றுகை

தமிழக நலன்களுக்கு எதிராக, ஜனநாயக மரபுகளுக்கு முரணாக செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர். என். ரவியை தமிழகத்தை விட்டு வெளியேறக் கோரியும், தருமை ஆதீனம் ஆளுநர் ரவியை அழைத்து இந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஏற்பாடு செய்த “பல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் ஞான ரத யாத்திரையை ” தொடங்கி வைப்பதற்காக இன்று (19-04-2022 செவ்வாய்) மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் மேற்ககொண்ட இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. ஆளுநரை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply