மதுரை செஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வரும் மே மாதம் 29 அன்று மதுரையில் நடைபெறும் செஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டி 28-03-2022 அன்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து பெரியாரிய உணர்வாளர்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தார். தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலையச் செயலர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆசிரியருடன் புலவர் கலி. பூங்குன்றன் மற்றும் தோழர் வீ குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply