திராவிடர் விடுதலைக் கழக தோழர், பெரியாரியவாதி, தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் தோழர் திலீபன் செந்தில் அவர்களின் மருத்துவ செலவினை பொறுப்பேற்போம்!

திராவிடர் விடுதலைக் கழக தோழர், பெரியாரியவாதி, தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் தோழர் திலீபன் செந்தில் அவர்களின் மருத்துவ செலவினை பொறுப்பேற்போம்! – மே பதினேழு இயக்கம்

திராவிடர் விடுதலைக் கழக தோழர், பெரியாரியவாதி, தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் தோழர் திலீபன் செந்தில் அவர்கள் CML (Chronic Myloid Leukemia) எனும் ஒருவகையான ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணமடைய முடியும் என்ற நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தோழர் திலீபன் செந்தில் சீரிய கள செயற்பாட்டாளர். மதுரையை சேர்ந்த தோழர் திலீபன் செந்தில், மதுரையில் ஒருங்கிணைக்கப்படும் மே பதினேழு இயக்கத்தின் போராட்டங்கள், கருத்தரங்கம் என அனைத்திலும் பங்கேற்பவர். அதே போல், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, தமிழீழ, தமிழ்த்தேசிய போராட்டங்கள் அனைத்திலும் உத்வேகத்துடன் தனது பங்களிப்பை செலுத்துபவர். நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்வது மூலம் போராட்டக் களத்தில் அவரை பார்க்க இயலாமல் போயிற்று. தோழர் திலீபன் செந்தில் அவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென மே பதினேழு இயக்கம் விரும்புகிறது. எனவே, அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவினை மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பொறுப்பேற்க மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பங்களிப்பு செய்ய வேண்டிய விவரம் கீழே உள்ளது.

மே பதினேழு இயக்கம்
9884864010

****************

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேர்ந்தவரும் தமிழ்தேசிய பெரியாரிய செயற்பாட்டாளருமான தோழர் திலீபன் செந்தில் அவர்கள் கடந்த சில மாதங்களாக CML ( Chronic Myloid Leukemia ) எனும் ஒருவகையான ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நோய் தொடர் சிகிச்சையின் மூலம் குணமடையக் கூடியதேயாயினும் தொடர் மருத்துவமும் கண்காணிப்பும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேவை.

மேற்கண்ட நோய் பாதிப்பிற்காக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ஆலோசனையின் பெயரில் தனியார் மருத்துவமனையில் தொடர் திலீபன் செந்தில் மருத்துவம் பார்த்து வருகிறார்.

அவருடைய நோயைத் தீர்க்க மருத்துவ மற்றும் குடும்பத் தேவைகளுக்காக நிதி தேவைப்படுகிறது.

தோழர் திலீபன் செந்தில் தனது குடும்ப வாழ்க்கையோடு பொது வாழ்க்கையையும் தனது தலையாயக் கடமையாக செய்து வருபவர்.

எனவே மக்களுக்கான ஒரு பொது ஊழியரை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

தோழர் திலீபன் செந்தில் அவர்களின் மருத்துவ தேவைக்கான உதவிகளை செய்வதற்கு மதுரையில் உள்ள அரசியல் இயக்கங்கள் ஒன்றுகூடி தோழர் திலீபன் செந்தில் மருத்துவ உதவி குழு தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவின் சார்பாக அரசியல் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோரிடம் நன்கொடை பெற்று ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை தோழர் திலீபன் செந்தில் அவர்களின் மருத்துவ உதவிக்காக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் மூத்த தோழர் தமிழ்பித்தன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1. திராவிடர் விடுதலைக் கழகம்
2. தமிழ்த்தேச மக்கள் முன்னணி
3. தமிழ் தமிழர் இயக்கம்
4. தமிழக வாழ்வுரிமைக் கட்சி
5. தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சி
6. குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
7. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
8.மக்கள் சட்ட உரிமைகள் இயக்கம்
9. தமிழ் தேச குடியரசு இயக்கம்
10.ஏழு தமிழர் விடுதலைக் கட்சி
11. மே 17 இயக்கம்
12.புரட்சிகர இளைஞர் முன்னணி

ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் முன்னணியாக இருந்து நிதி திரட்டுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தோழர் திலீபன் செந்தில் அவர்களுக்கு மருத்துவ உதவிக்காக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு – 9894164082

Bank: State Bank Of India
Ac Name: Kamatchi Pandi
Ac No: 10348405634
Branch: West Tower Street Madurai
IFSC No: SBIN0008641
PhonePe: 944395266

Leave a Reply