தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழர் தமிழ்வாணன் அவர்களின் மகன் நவீன் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பட்டியல் இன பெண் மீது சாதி ரீதியாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் நடத்திய கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழர் தமிழ்வாணன் அவர்களின் மகன் நவீன் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்ய கோரி கடந்த பிப்ரவரி 25 அன்று தபெதிக சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதற்காக மணிக்கொல்லை கிராமத்தில் தோழர் தமிழ்வாணன் பெரியார் படம் போட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். மேலும் கும்பத்தோடு கலந்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அவரது நண்பர்களோடு பள்ளி சென்று திரும்பும் போது, அவரை சாதிரீதியாக கேவலமாக திட்டியதோடு கடுமையாக தாக்கியுள்ளனர். விவரம் தெரிந்து ஊர்மக்கள் கூடியதால் தாக்கியவர்கள் தப்பியோடினர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

சாதிவெறியர்களின் இச்செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தோழர் தமிழ்வாணன் மகன் நவீனை தாக்கியவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply