பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு மரம் நடும் போராட்டம் – மே 17 இயக்கம் ஆதரவு

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என, பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாலியப்பட்டு காத்திருப்பு போராட்டத்தின் 50வது நாளன்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தின் 57வது நாளான 16.02.2022 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு மரக்கன்றுகள் நடும் விழா கிராம மக்களால் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் முழு ஆதரவை அளிக்கிறது.

மேலும், தமிழக அரசு போராடும் கிராம மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே 17 இயக்கம்

9884864010

Leave a Reply