தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கையின் தூதரகம் முற்றுகை

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் பத்திரிக்கையாளர்களிடையே உரையாடிய காணொலி

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை கப்பலை படகில் மோதி ராஜ்கிரண் என்பவரை படுகொலை செய்ததோடு, இரண்டு மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ச்சியாக தாக்கி படுகொலை செய்வதும், காயப்படுத்துவதும், உடமைகளை அழிப்பதும், கைது செய்து சிறையிலடைப்பதும் என தொடர் அஜாராகத்தில் ஈடுபடும் இலங்கை அரசை கண்டித்து, சென்னையி நுங்கம்பாக்கதில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று (23-10-2021) மாலை நடைபெற்றது.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகையின் போது, தமிழ்நாட்டு மீனவர்களை கொன்ற இனப்படுகொலை இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசை கண்டிக்காத, மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்காத இந்தியா ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சௌ. சுந்தரமூர்த்தி அவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.

Leave a Reply