சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – ஆகஸ்டு 30

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – ஆகஸ்டு 30

உலகின் எந்த ஒரு தேசிய இனமும் அதன் காலகட்டத்தில் ஏகாதிபதிய, சர்வாதிகார அதிகாரங்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகாத இனமே இல்லை எனலாம். ஒவ்வொரு தேசிய இனத்தின் உரிமை போராட்டங்களின் போதும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போதும் அரசுகளின் ஒடுக்குமுறைகளில் ஒரு வழிமுறையாக, போராடும் மக்களை கடத்துவதும், காணாமல் போகச் செய்வதும் என தன் கோர முகத்தை காட்டுகிறது.

சம காலத்தில் தமிழீழம், சிரியா, பாலஸ்தீனம் போன்ற தேசங்களில் போரின் போது பொதுமக்கள் அரசுகளின் இரகசிய படைகளால் கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் பின்பு அவர்கள் “காணாமல் போய்விட்டனர்” என்று அறிவிப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்ததாக போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலமாக இருக்கிறது.

சிரியாவில் இதுவரை 98000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் அறிவிக்கின்றன. 2009 ஈழப்போரின் இறுதியில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் நிலை இன்றுவரை என்னவானதென தெரியவில்லை. இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணையம் அமைப்பதாக ஐ.நாவில் வாக்குறுதி கொடுத்தும் இன்றளவும் நிறைவேற்றவில்லை. கோத்தபய ராஜபக்சே காணமலானோர் இறந்து போயிருக்கலாமென அறிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை ஈழத்தமிழ் உறவுகள் நடத்திவருகிறார்கள். இன்றளவும் இலங்கையும், சர்வதேசமும் இதற்கான பொறுப்பேற்காமல் தவிக்கிறது.

தன் நேச உறவுகள் இருக்கின்றனரா இல்லையா என்பது கூட தெரியாமல் பெற்றோரும் மற்ற உறவினர்களும் ஆண்டுக் கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். அரசுகளே இன்றளவும் அப்பாவி பொதுமக்களை கடத்தி காணாமல் ஆக்குகின்றனர். இந்த மனித தன்மையற்ற செயலை கண்டிப்பதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அத்துணை மக்களின் உறவுகளின் உரிமை போராட்டத்திற்கும் துணை நிற்போம் என்று மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply