தழல் ஈகியர் தோழர் செங்கொடி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது -28.8.2011

தழல் ஈகியர் தோழர் செங்கொடி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது -28.8.2011

2011 ம் ஆண்டு இராஜிவ் காந்தி கொலைவழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்களின் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு தூக்கு நாளும் அறிவிக்கபட்டது. அதை தொடர்ந்து மக்களும், அரசியல் இயக்கங்களும் பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அவ்வகையில் ஆகஸ்டு 28, 2011 ம் நாள் காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட அவ்வியக்க தோழர் செங்கொடி அவர்கள் மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தின் முன் தனக்குத் தானே தீ வைத்து தழல் ஈகியரானர்.

மரண தண்டனையை தடுத்து நிறுத்த இயலாது என்கிற அன்றய அதிமுக-ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாட்டை சுக்குநூறாக உடைத்தது தோழர் செங்கொடியின் ஈகம். மக்கள் எழுச்சியை உண்டாக்கிய தோழர் செங்கொடியின் மரணம், ஆளும் வர்க்கத்திற்கு எதிராக மக்களின் குரலை தீவிரப்படுத்தியதைக் கண்டு அஞ்சி அதிமுக அரசு, மூன்று தமிழர்களின் மரணதண்டனையை நிறுத்தி வைக்கவும் பின்னர் ரத்து செய்யவும், ஏழு தமிழர்களை விடுதலை செய்யவுமான முடிவுகளை எடுக்க வைத்தது. மேலும் இவற்றை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேறுவதற்கு அடிப்படையாக செங்கொடியின் போராட்டமே அமைந்தது..

இராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இரட்டை ஆயுட்காலத்திற்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கும் ஏழு தமிழர்களின் விடுதலையை தொடர்ந்து இந்திய ஒன்றியத்தின் பார்ப்பணிய கொள்கை தடுத்து வருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இந்திய ஒன்றியம் துடிப்பதும், அதை தமிழ்நாட்டு மக்களும், இயக்கங்களும் பெரும் சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களுக்குப் பின் தடுப்பதும் என்பது தொடர் நிகழ்வாகி வருகிறது.

விசாரணையில் குளறுபடி, வழக்கு கோப்புகள் தொலைப்பு, விசாரணை அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம், சர்வதேச சதி பற்றிய தெளிவின்மை என்பதற்கெல்லாம் மேல் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியான விடுதலை கூட ஏழு தமிழரின் விடுதலையை இன்னமும் சாத்தியப் படுத்த முடியாமல் இருப்பதற்கு காரணம் தமிழர்கள் மீதான ஆரியர்களின் வரலாற்று வழி காழ்ப்புணர்ச்சியே ஆகும். தமிழர்கள் மீது ஒரு தீராப் பழியை சுமத்த 32 ஆண்டுகளாக ஏழு தமிழர்களை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துகிறது இந்திய ஆரிய பார்பனியம்.

தமிழர்களின் ஒன்றுபட்ட களப்போராட்டமே 7 தமிழர்களின் விடுதலையை உறுதி செய்யும். அவ்விடுதலையே தழல் ஈகியர் தோழர் செங்கொடி அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக அமையும். அதை நோக்கியப் போராட்டத்தை முன்னெடுப்போம். ஏழு தமிழர்களின் விடுதலையை உறுதி செய்வோம்.

தோழர் செங்கொடி அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply