நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்பது கடும்கண்டனத்திற்குரியது.

நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்கும் பட்டியலை கவனித்தால், குஜராத்தி மார்வாடி-பனியா கும்பலுக்கு சாதகமான துறைகளே விற்கப்படுகின்றன. இவை பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் நிறுவனகட்டமைப்புகள். மின்சாரம்-போக்குவரத்து-எரிபொருள்-கனிமவளம்-தானியகிடங்கு எனும் அடிப்படை பொருளாதார வளர்ச்சிக்கான கட்டுமானங்கள். இவற்றை ஆக்கிரமிக்கும் பனியாக்களின் கைகளில் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் வீழும்.

வங்கிகளின் வழியே நிதிமூலதனத்தை கட்டுப்பாட்டிற்குள் 1940களில் கொண்டுவந்த பனியாக்களிடம், இச்சொத்துக்கள் சென்று சேரப்போகின்றன. இவற்றை வாங்கப்போகும் கும்பலுக்கான கார்ப்பரேட் வரிகள் உள்ளிட்ட வரிகளை மோடி அரசு ஏற்கனவே குறைத்தோ, தள்ளுபடி செய்தும் அவர்களின் வருமானத்தை கூட்டியது. அவர்களின் வராக்கடன்களை தள்ளுபடி செய்தது, மேலதிக கடன்களை கொட்டிக்கொடுத்தது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, விமானநிலையம், துறைமுகம் தானிய கிடங்குகள் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பது அராஜகமானது. இச்சொத்துக்களின் வளர்ச்சிக்கும், வளத்தின் பின்னனியில் தமிழக மக்களின் உழைப்பும், வரியும் உண்டு என்பதை மறக்கக்கூடாது. இச்சொத்துக்களை எதேச்சதிகரமாக விற்பது கடும்கண்டனத்திற்குரியது.

இவற்றை விற்பதால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்காது.அரசின் வருமானங்கள் குறைவதற்கே இது வழிவகுக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக கொடுமை கட்டணங்களை மக்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள். விவசாயம், கனிமவளம், எரிகாற்று, நெடுஞ்சாலைகள் போன்ற பொருளாதார அடிப்படைகளை தமிழர்கள் விட்டுக்கொடுக்கக்கூடாது.

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்

Leave a Reply