தமிழறிஞர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்!

தமிழறிஞர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்!

தமிழுக்கும், தமிழருக்கும் அறிவுக்களஞ்சியமாய் விளங்கும் நூல்கள் பல படைத்தளித்த தமிழறிஞர் ‘முதுமுனைவர்’ அய்யா இரா.இளங்குமரனார் அவர்கள் நேற்று (25.07.2021) உடல்நிலை காரணமாக தனது 94 வது வயதில் இயற்கை எய்தினார்.

முதுமுனைவர் இளங்குமரானார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் ஊரில் 3.1.1927 ல் பிறந்தவர். தமிழாசிரியராக பணியை தொடங்கியவர், பின் சென்னை பல்கலைகழகத்தில் ‘புலவர்’ பட்டம் பெற்றார்.

இயற்பெயரான கிருஷ்ணன் என்ற தன் வடமொழி பெயரை, தனித்தமிழ் இயக்கத்தின் தொடர்பாலும், பாவாணர் மற்றும் மறைமலை அடிகளார் அவர்கள் மீது கொண்ட மதிப்பாலும் ‘இளங்குமரன்’ என்று மாற்றிக் கொண்டார்.

இலக்கண வரலாறு, காக்கைபாடினியம், எங்கும் பொழியும் இன்பத்தமிழ், குண்டலகேசி, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், திருக்குறள் தமிழ் மரபுரை, தேவநேயம், நாலடியார் தெளிவுரை, பாவாணர் வரலாறு, யாப்பருங்கலம், புறத்திரட்டு மற்றும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் (10 தொகுதிகள்) போன்ற எண்ணற்ற நூல்கள் அவரால் இயற்றபட்டவையே.

தமிழக்கு நூற்கொடை கொடுத்த முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தனது பணியினை நாம் கையில் ஒப்படைத்துவிட்டு தமிழோடு கலந்துவிட்டார். அவரது தமிழ்ப்பணியினை செவ்வனே தொடர்வோம் என்று உறுதி ஏறப்போம்.

தமிழறிஞர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply