இந்தியாவின் முதல் முதல் பெண் மருத்துவர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் நினைவுநாள் – 22.07.1968

இந்தியாவின் முதல் முதல் பெண் மருத்துவர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் நினைவுநாள் – 22.07.1968

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், முதல் பெண் சட்ட பேரவை உறுப்பினரும் (நியமனம்), தேவதாசி முறையை எதிர்த்து சட்டப்பேரவையில் குரல் கொடுத்தவருமான மருத்துவர் முத்துலட்சுமி அவர்களின் நினைவுநாள் இன்று.

தொடக்க கல்வியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாலும், உயர்நிலைக் கல்வி சேர்வதற்கு அடிப்படைவாத சமூகம் பெரும் தடையாக இருந்தது. இது அறிந்த புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா அவர்கள் அன்னை முத்துலட்சுமி அவர்களுக்கு மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் இடம் கொடுத்தது மட்டுமல்லாமல், படிப்பதற்கு நிதி உதவியும் செய்தார்.

அப்பளியில் மட்டுமல்லாமல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் (அறுவை சிகிச்சை பிரிவு) படிக்கும் போதும் அன்னை முத்துலட்சுமி மட்டுமே பெண் மானவியாக இருந்தார். நீதிக்கட்சித் தலைவரும், அன்றைய சுகாதார துறை அமைச்சராக இருந்த திரு. பனகல் அரசர் அவர்களின் உத்தரவால் நிதியுதவி பெற்று இங்கிலாந்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி கற்றறிந்தார். பின் அன்னிபெசன்ட் அம்மையாரி பின்பற்றி பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார்.

இந்திய மகளிர் சங்கத்தின் சார்பில் 1926ல் சட்ட பேரவை கவுன்சிலில் நியமிக்கபட்ட அவர், தேவதாசிகள் என்ற பெயரில் பெண்கள் வாழ்க்கை சீரழிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தார். அங்கு அவருக்கும், சத்திய மூர்த்தி ஐயருக்கும் இடையில் நடந்த வரலாற்று புகழ் பெற்ற சட்ட பேரவை விவாதம் பதிவானது. தந்தை பெரியார் அவர்களின் பெரும் ஆதரவு அன்னை முத்துலட்சுமி அவர்களுக்கு இருந்தது. தனது குடியரசில் பெரியார் கீழ் கண்டவாறு எழுதினார்.

“கடவுளின் பெயரால் பெண்களுக்கு, விபச்சாரித்தனம் செய்ய பொட்டுக்கட்டுதல் என்னும் பெயரில் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது”

ஈரோட்டில் 1930ம் ஆண்டு நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் முத்துலட்சுமி அம்மையாரின் மசோதா விரைவில் சட்டமாக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தைத் தந்தை பெரியார் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மேலும் மருத்துவர் அன்னை முத்துலட்சுமி அவர்கள் 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் நிவாரண நிதி அமைப்பை ஏற்படுத்தி. சென்னை அடையாறில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தையும், மருத்துவமனையையும் உருவாக்கினார். இன்று இந்த ஆய்வுக்கழகம் பலர் உயிர் காக்கும் அறிவியல் கூடமாக திகழ்கிறது.

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்று கேட்ட சமூகத்தில் சாதனைப் பெண்ணாக வாழ்ந்து காட்டிய மருத்துவர் அன்னை முத்துலட்சுமி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply