பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் பிறந்தநாள் – 15.07.1903

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் பிறந்தநாள் – 15.07.1903

“இனிமேல் கடவுள் வாழ்த்து பாடவேண்டாம்.காமராஜர் வாழ்த்து பாடுங்கள்”

காங்கிரஸ்காரராக இருந்து இந்திய தேசியத்தை முன்நிறுத்திய பெருந்தலைவர் காமராசர் அவர்களை பற்றி, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தனித்தமிழ்நாடு கோரிக்கையை முழங்கிய தந்தை பெரியார் அவர்கள் புகழ்ந்து கூறிய வரிகள்தாம் இவை.

ஆம், பெரியார் காமராசரை பற்றி கூறியது வெறும் புகழ்ச்சி சொற்களல்ல. அன்றைய அரசியலில் சனாதனத்தின் குரலாக ஒலித்த ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளுக்கு பதில் 27000 பள்ளிகளை திறந்தும், குலக்கல்வி திட்டத்தை ஒழித்தும் உண்மையிலேயே தமிழர்களின் கல்விக் கண் திறந்த ‘பச்சைத் தமிழரானார்’.

உயர் சாதியினரின், குறிப்பாக பார்ப்பனர்களின், ஆதிக்கத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத போக்கை தடுக்க தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார். காமராசரும், பெரியார் நினைத்ததை செயல்படுத்தினார். இதை பற்றி கேட்கப்பட்டபோது “பெரியார் நல்லது தானே சொல்றாரு. அதை நிறைவேத்துறது எனக்கு பெருமைதான்” என்று பதிலளித்தார்.

தமிழ்நாடு முழவதும் பட்டியல் சமூகத்திற்கு தனிப்பள்ளிகள் உருவாக்கி பட்டியல் சமூக மாணவர்கள் எவ்வித சாதிய ஒடுக்குமுறையும் இல்லாமல் படிக்க வழி செய்தார். நீதிக்கட்சி முன்னெடுத்த மதிய உணவு திட்டத்தை தமிழ்நாடெங்கும் பள்ளிகளில் செயல்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களும், ஏழைக்களும் தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடர இந்த திட்டம் பேருதவியாக இருந்தது.

காமராசரின் பல அரசியல் நிலைப்பாடுகள் இந்தியத்திற்கு ஆதரவாக இருந்தாலும், சனாதன எதிர்ப்பிலும், சாதி எதிர்பிலும் சமரசமின்றி நின்றார். அதன் காரணமாக இன்றைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னோடி அமைப்பான ஜனசங்க குண்டர்களால் கொலை மிரட்டல் விடப்பட்டு, அவர் தங்கிருந்த டெல்லி வீடு கொளுத்தப்பட்டது. ஆனால் பெருந்தலைவர் காமராசர் அதிலிருந்து தப்பித்திருந்தார்.

இந்திய பிரதமரை முடிவு செய்யும் அளவிற்கு அரசியல் தலைமையாக உருவெடுத்த பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010 

Leave a Reply