கோவையில் தமிழின விரோத தினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம்!

கோவையில் தமிழின விரோத தினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம்!

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு என்னும் தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று தினமலர் பத்திரிக்கை இன்றைய (10-07-2021) நாளிதழில் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது. இதனை மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து கண்டித்தன.

தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ்நாட்டை இரண்டு-மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தமிழர் விரோத ஆர்எஸ்எஸ்-பாஜக பார்ப்பன கூட்டமும் குஜராத் பனியா கும்பலும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு மண்டல வணிகத்தை மார்வாடிக்களிடம் கையளிக்க முயலும், மண்ணிற்கு தொடர்பில்லாத இந்த வடநாட்டு கூட்டத்தின் தமிழின விரோத திட்டத்தை பரப்பும் விதமாக தினமலர் பத்திரிக்கை செய்தி இருந்தது.

தினமலர் பத்திரிக்கையின் இந்த தமிழின விரோத செயலை கண்டித்து கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம் இன்று (10-07-2021) சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழின விரோத பத்திரிக்கை தமிழர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply