‘திராவிட சாத்திரி (சாஸ்த்ரி)’ என்று அழைக்கப்பட்ட திரு.பரிதிமாற் கலைஞர் அவர்கள் பிறந்தநாள் – 06.07.1890

‘திராவிட சாத்திரி (சாஸ்த்ரி)’ என்று அழைக்கப்பட்ட திரு.பரிதிமாற் கலைஞர் அவர்கள் பிறந்தநாள் – 06.07.1890

“இந்தச் சூரிய நாராயணருக்கு மட்டும் ஏன் இவ்வளவு தமிழ்ப் பற்று? அதிலுந் தனித்தமிழ்ப் பற்று? நான் தனித்தமிழ் இயக்கங் காண்பதற்கு முன்பே அவர் தனித்தமிழ் உணர்ச்சி கொண்டு தம் வடமொழிப் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டாரே!”

இவ்வாறு மறைமலை அடிகளார் அவர்களால் வியந்து பாராட்டப்பட்டவர் திரு.பரிதிமாற் கலைஞர் அவர்கள். சூரிய நாராயணா சாஸ்திரி என்ற வடமொழி இயற்பெயரை தமிழின்பால் கொண்ட பேரன்பாலும், தமிழில் வலிந்து வடமொழி புகுத்தப்படுவதை எதிர்த்தும் தன் பெயரை தனித்தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் தனித்தமிழில் பேசவும், எழுதவும் செய்தார்.

சென்னை கிருத்துவ கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று சென்னை பல்கலை கழகத்தில் தமிழ்த் துறையில் பணியாற்றிய திரு.பரிதிமாற் கலைஞர் அவர்கள் அந்த பல்கலை கழக்கத்தில் பட்ட படிப்பு பாடங்களில் தமிழை நீக்கிவிட்டு அதன் மூலம் வடமொழி திணிப்பை முயற்சித்த பொது அதை எதிர்த்து போராடி தடுத்தார்.

இத்தகைய முன்னெடுப்புகளை திரு.பரிதிமாற் கலைஞர் அவர்கள் தமிழ் பற்று என்ற ஒரு நோக்கில் மட்டுமல்லாமல் சமூக பார்வையில், ஆரிய எதிர்ப்பில் நின்று முன்னெடுத்தார் என்பதை தமிழை பட்டப்படிப்பில் நீக்குவது தொடர்பாக அவரின் கீழ்க்கண்ட வரிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

“பிராமணராயினாருக்கு விசேஷமான அனுகூலமும் ஏனையோருக்கு விசேஷப் பிரதிகூலமும் விளையும்”

மேலும் திருக்குறளுக்கு பரிமேலழகர் தந்த உரை பற்றி கூறும் போது

“தனித்தமிழ் நூலாகிய ‘திருக்குற’ளிற்குப் பரிமேலழகரும், வடநூலார் மதம் பற்றியே உரை வகுத்தேகினர்”

பல தமிழ் நூல்களை இயற்றிய திரு.பரிதிமாற் கலைஞர் அவர்கள் எழுத்து நவீன இயக்கியங்களுக்கு முன்னோடியாக இருந்தது. அதன் காரணமாக பாவாணர் மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் அவரை வியந்து ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் தமிழ்ப் பேரறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை திரு.பரிதிமாற் கலைஞர் அவர்களைத் ‘திராவிட சாத்திரி’ என்று அழைத்தார்.

இவ்வாறு தமிழுக்கு உழைத்தவரும், தனித்தமிழ் உணர்வு தோன்ற விதையாய் இருந்தவருமான திரு.பரிதிமாற் கலைஞர் அவர்கள் நினைவை போற்றுவோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply