சாதி ஆதிக்க வெறிக்கு பலியான மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம்

சாதி ஆதிக்க வெறிக்கு பலியான மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம்- மே பதினேழு இயக்கம்.

தமிழ்ச் சமூகத்தை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைபடுத்த பார்ப்பனியம் புகுத்திய தீமைதான் சாதி. இந்த சாதி எனும் தீமையை சுமந்து கொண்டு திரிபவர்களால் கடந்த காலங்களில் தமிழ் சமுகத்தில் நடந்தேறிய கொடூரங்கள் அதிகம். அப்படி 1997 மதுரை மாவட்டம் மேலூரில் மேலவளவு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தலித் மக்கள் நின்றார்கள் என்ற காரணத்திற்காக 8 பேர் ஆதிக்கசாதி வெறியினால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜூன் 30).

தமிழர்களுக்குள் ஒரு பிரிவினர் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்ற படிநிலையை வைத்துக்கொண்டு நாம் ஒரு நாளும் தமிழர்களின் உரிமை போராட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி ஒரு அங்குலம் கூட நகர்ந்து விட முடியாது. ஆகவே தமிழர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் ஆனால் சாதி மதம் கடந்து தமிழர்களாய் ஒன்று இணைவது தான் ஒரே வழி. அதுவே சாதி ஆதிக்க வெறியால் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக இருக்கும்.

சாதிவெறிக்கு பலியான மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply