ஆற்றல்மிகு தோழர் தர்மபுரி மகாலிங்கம் மறைந்தார் (11-06-2021)

ஆற்றல்மிகு தோழர் தர்மபுரி மகாலிங்கம் மறைந்தார் (11-06-2021)

போராட்டமே வாழ்க்கை ஆகிப்போன தமிழகச் சூழலில் தன்னை அந்த போராட்டத்திற்கு ஒப்புக்கொடுத்த மே பதினேழு இயக்கத்தின் தர்மபுரி தோழர் மகாலிங்கம் மறைந்தார் என்பது இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.

பல ஆண்டுகளாக சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த போதிலும் அது குறித்து எப்போதும் கவலைப்படாமல் தமிழர் உரிமைப் போராட்டங்களில் முன்நின்றவர். பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களை தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோழமைகளோடு தனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் முன்னெடுத்தவர்.

தமிழீழம் வெல்லப்பட வேண்டும் என்பதிலும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர் தர்மபுரி பகுதியில் ஈழ அகதிகள் முகாம் இருப்பது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்றும் அதை எப்படியாவது நீக்கி நம்மை போல அவர்களும் தமிழ் நாட்டில் சுதந்திரமாக வாழ வைக்க வேண்டும் தோழர் என்று அடிக்கடி பேசிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருந்தவர்.

மே பதினேழு இயக்கத்தின் மீதும் அதன் கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுறுதி கொண்டு அதை பரப்புவதில் முக்கிய பங்காற்றிய தோழரின் தீடீர் மறைவு இயக்கத்திற்கு பேரிழப்பாகும். தோழரின் இழப்பால் துன்பத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு மே பதினேழு இயக்கம் என்றும் உறுதுணையாக இருக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply