திராவிட இயக்கங்களின் முன்னோடி, நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி. தியாகராயர் அவர்களுக்கு புகழ்வணக்கம்

- in வீரவணக்கம்

திராவிட இயக்கங்களின் முன்னோடி, நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி. தியாகராயர் அவர்களுக்கு புகழ்வணக்கம்
(பிறப்பு: 27.04.1852 மறைவு: 28.04.1925)

இந்திய ஒன்றியத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு சமூக நீதி நிலைநிறுத்தப்பட்ட மாநிலங்களில் முதன்மையாக இருப்பது தமிழ்நாடு தான் என்பதற்கு மிக முக்கியமான காரணமாய் விளங்கிய திராவிட இயக்கங்களின் தொடக்கப் புள்ளியான நீதிக்கட்சியை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் சர் பிட்டி.தியாகராயர் அவர்கள் ஆவார்.

‘வெள்ளுடை வேந்தர்’ என்று அழைக்கப்படும் சர் பிட்டி.தியாகராயர் அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தில் வசித்து வந்த ஒரு பெரும் தொழிலதிபர் ஆவார். முதலில் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், அக்கட்சியில் நிலவிவந்த உயர்சாதியினர் ஆதிக்கத்தை எதிர்த்து வெளியேறினார். பின்பு 1916ஆம் ஆண்டு டாக்டர் டி.எம்.நாயர் அவர்களோடு இணைந்து “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்” என்றதொரு அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வமைப்பின் சார்பில் வெளியே வந்த ‘நீதி’ (Justice) என்ற பத்திரிக்கையை அடையாளமாகக் கொண்டு இவ்வமைப்பு பிற்காலத்தில் ‘நீதிக்கட்சி’ என்றே ( Justice Party) அழைக்கப்பட்டது

சர் பிட்டி.தியாகராயர் அவர்கள் தலைமையில் சென்னை மாகாணத்தில் போட்டியிட்ட நீதிக்கட்சி 1921ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றி அதுவரை இந்திய ஒன்றிய தேசியம் பேசிய காங்கிரஸ்காரர்கள் மட்டும்தான் ஆட்சி செய்ய முடியும் என்று இருந்த தமிழக மண்ணில், சமூகநீதி பேசுகிற, திராவிட சித்தாந்தத்தை கொண்ட அமைப்பு ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றைப் பதிவு செய்தது.

தமிழ்நாட்டில் கல்வித்துறையில் பல மாற்றங்களுக்கு வித்திட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சர் பிட்டி.தியாகராயர் அவர்களின் முயற்சியால் திரு அண்ணாமலை செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்டதுதான். சென்னை மையப்பகுதியில்தி-நகர் என்று அனைவராலும் சுருக்கமாக அழைக்கப்படும் பகுதி சர் பிட்டி.தியாகராயர் அவர்களின் பெயரில் விளங்கக்கூடிய ‘தியாகராய நகர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மண்ணில் சமூகநீதியை அரசியலை வித்திட காரணமாய் அமைந்த சர் பிட்டி.தியாகராயர் அவர்களுக்கு மே 17 இயக்கம் தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply