சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரை

சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரையை பிப்ரவரி 22 முதல் சென்னை நகரில் மே பதினேழு இயக்கம் நடத்தி வருகிறது. அதன் இரண்டாம் நாளான 23-02-2021 செவ்வாய் அன்று, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பரப்புரை தொடர்ந்தது.பரப்புரையின் போது, இட ஒதுக்கீடு குறித்த தோழர்களின் விளக்கத்தை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடனே கவனித்தனர். பரப்புரைக்கான பொதுமக்களின் ஆர்வத்தை காணும் போது, பரப்புரையில் ஈடுபட்ட தோழர்கள் களைப்பறியாமல் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்தனர். மார்ச் 13ல் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு மாநாடு குறித்த தூண்டறிக்கைகள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டன.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply