சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் நினைவை போற்றுவோம்!

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் நினைவை போற்றுவோம்!

தமிழ்நாட்டில் பொதுவுடமை சித்தாந்தத்திற்கு வித்திடவும், இந்திய அளவில் பொதுவுடமை சிந்தனை வளர்ச்சி பெறவும் மாபெரும் பணியை செய்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் எழுத்து, பேச்சு போற்றுதலுக்குறியது. பாட்டாளி மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் எழுச்சிக்காகவும் தொடர்ச்சியாக களமாடியவர் ஐயா சிங்காரவேலர் அவர்கள். மிக ஆழமான அரசியல் விவாதங்களை தத்துவங்களை கருத்துக்களை தமிழ்ச் சமூகத்திலே பதிவு செய்தவர், தொழிற்சங்கங்களை கட்டி எழுப்பியவர், இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

தோழர் சிங்காரவேலர் அவர்களின் அவரது 75 வது நினைவு நாளான இன்று (11-02-21), பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் குமரன், திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் உமாபதி உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடையே பேசிய தோழர் திருமுருகன் காந்தி, சிங்காரவேலர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக, அவரது நினைவிடம் அமைந்துள்ள லேடி வெலிங்கடன் பள்ளி வளாகத்தை சிங்காரவேலர் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என்றும், அங்கு அவருக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், அவரது அறிவுப் பணியை போற்றும் விதமாக ஒரு நூலகத்தை அமைத்து அவரது முற்போக்கு சிந்தனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பெரியாரிய உணர்வாளர்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தார்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply